Ad Code

Responsive Advertisement

பள்ளி மாணவனை அடித்த ஆசிரியர் சஸ்பெண்ட்

கிழக்கு தாம்பரம், ஆனந்தபுரம், வாஞ்சிநாதன் தெருவை சேர்ந்தவர் ஹாஜா தமீம், தாம்பரம் நகர காங்கிரஸ் கமிட்டி செயலாளர். இவரது 12 வயது மகன், கிழக்கு தாம்பரத்தில் உள்ள தனியார் பள்ளியில் 7ம் வகுப்பு படிக்கிறான். நேற்று முன்தினம், 7ம் வகுப்பு ஆசிரியர், தேர்வு பணிக்காக சென்று விட்டதால், 6ம் வகுப்பு ஆசிரியர் குணசேகரன் தற்காலிகமாக 7ம் வகுப்பை கவனித்ததாக கூறப்படுகிறது. 


அப்போது, ஹாஜா தமீம் மகனிடம் ‘வகுப்பை சிறிது நேரம் கவனித்துக்கொள், நான் மற்ற வகுப்புக்கு பாடம் நடத்திவிட்டு வருகிறேன்,’ என ஆசிரியர் குணசேகரன் கூறிவிட்டு சென்றுள்ளார். வகுப்பில் ஆசிரியர் இல்லாததால், மாணவர்கள் கூச்சலிட்டனர். 



இதனால், ஆத்திரமடைந்த குணசேகரன், 7ம் வகுப்புக்கு வந்து மாணவர்களை கண்டித்ததுடன், வகுப்பை பார்த்துக் கொள்ளும்படி கூறிவிட்டு சென்றும், மாணவர்கள் சத்தம்போடுவதை தடுக்கவில்லையே என கேட்டு மேற்கண்ட மாணவனை சரமாரியாக அடித்தாக கூறப்படுகிறது. இதனால், பள்ளி முடிந்து வீட்டுக்கு சென்ற சிறுவன் அழுது கொண்டே இருந்துள்ளான். அவனிடம், பெற்றோர்கள் விசாரித்தபோது, நடந்த சம்பவத்தை கூறியுள்ளான். உடனே, மகனை அழைத்து கொண்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு சென்றனர். அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. 


இந்நிலையில், நேற்று காலை மாணவனின் உறவினர்கள், பொது நல அமைப்புகள், சம்பந்தப்பட்ட ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, பள்ளியை முற்றுகையிட்டனர். அப்போது, புகாரை மனுவாக கொடுத்தால் விசாரித்து நடவடிக்கை எடுக்கிறேன், என தலைமை ஆசிரியர் கூறினார். இதையடுத்து அவரிடம் புகார் மனு கொடுக்கப்பட்டது. அதன்பேரில் ஆசிரியர் குணசேகரன் மற்றும் சம்பந்தப்பட்ட மாணவன், வகுப்பில் இருந்த மாணவர்களிடம் விசாரணை நடந்தது. பின்னர், ஆசிரியர் குணசேகரனை சஸ்பெண்ட் செய்து, தலைமை ஆசிரியர் உத்தரவிட்டார். 

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement