அரசு பொறியியல் கல்லூரிகள், பாலிடெக்னிக்குகளில் பணிபுரியும் அனைத்து ஊழியர்களும் ஆதார் எண்ணை உடனடியாகப் பெற்று சமர்ப்பிக்க வேண்டும் என தொழில்நுட்ப கல்வி இயக்குநர் அலுவலகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதுதொடர்பாக, அரசு பொறியியல் கல்லூரிகள், பாலிடெக்னிக்குகள், சிறப்புப் பயிரங்குகளின் முதல்வர்களுக்கு இயக்குநர் அலுவலகம் அனுப்பியுள்ள சுற்றறிக்கை விவரம்:
தொழில்நுட்பக் கல்வித் துறையின் கட்டுப்பாட்டிலுள்ள அலுவலகங்களில் பணிபுரியும் அனைத்து பணியாளர்களின் ஆதார் எண்களும், இணையவழி ஊதியப் பட்டியல்கள் செயல்படுத்துவது தொடர்பான திட்டத்தில் இணைக்கப்பட உள்ளன.எனவே, அரசு தொழில்நுட்பக் கல்லூரிகளில் பணிபுரியும் அனைத்து பணியாளர்களின் ஆதார் எண்களையும் அந்தந்தக் கல்லூரி முதல்வர்கள் பெற்று உடனடியாக இந்தத் திட்டத்தில் இணைக்க வேண்டும்.
அனைத்து மாவட்டங்களிலும் வட்டாட்சியர் அலுவலகங்கள், உள்ளாட்சி அமைப்புகளில் ஆதார் அடையாள அட்டைக்குப் பதிவு செய்யும் பணி விரைவுபடுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைப் பயன்படுத்தி, ஆதார் எண்ணை இதுவரை பெறாத பணியாளர்கள் உடனடியாக அதற்கு விண்ணப்பித்து ஆதார் எண்ணைப் பெற்று அலுவலகத்தில் சமர்ப்பிக்குமாறும் கேட்டுக்கொள்ளப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை