Ad Code

Responsive Advertisement

தகவல் தொழில்நுட்ப முறைகளைப் பயன்படுத்தி சிறப்பாகக் கல்வியளிக்கும் அரசுப்பள்ளி' - தொழில்நுட்பத்தில் அசத்தும் அரசுப் பள்ளிக்கு தேசிய விருது அங்கீகாரம்!

தகவல் தொழில்நுட்பம் மூலம் புதுமையாகக் கற்பித்தலில் சிறந்த பள்ளிக்கான தேசிய அளவிலான விருதை சின்னமுத்தூரைச் சேர்ந்த அரசுப் பள்ளி வென்றிருக்கிறது.



'தி இந்து' இணையப் பிரிவால் அன்பாசிரியர் ஆக அடையாளப்படுத்தப்பட்ட தலைமையாசிரியை கிருஷ்ணவேணியின் முன்முயற்சிகளால் இந்த அங்கீகாரம் சாத்தியமாகி இருக்கிறது



தகவல் தொழில்நுட்ப கூட்டமைப்பு நிறுவனமான ICTACT, தமிழக அரசின் தகவல் தொழில்நுட்பத் துறை மற்றும் அரசு எல்காட் நிறுவனம் ஆகியவற்றின் சார்பில் தகவல் தொழில்நுட்பக் கல்வி முறையிலான போட்டிகள் பள்ளிகளுக்கு நடத்தப்படுகின்றன. இது இளைய தலைமுறையினரிடம் தொழில்நுட்பத்தை வளர்த்தெடுக்கும் முயற்சியாகக் கருதப்படுகிறது.



ஆண்டுதோறும் நடைபெறும் இப்போட்டியில் தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலை அரசு மற்றும் தனியார் மெட்ரிக் பள்ளிகள் கலந்துகொள்கின்றன. அதில் சீரிய முறையில், தகவல் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி சிறப்பாகக் கல்வியளிக்கும் பள்ளிகளைத் தேர்வு செய்கின்றனர்.



அதையொட்டி, இந்த ஆண்டும் பிப்ரவரி மாதம் நடத்தப்பட்ட தேசிய அளவிலான போட்டியில், 12 மாநிலங்கள் பங்கேற்றன. மொத்தம் கலந்து கொண்ட 1316 பள்ளிகளில், 3 பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டன. இதில் திருப்பூர் மாவட்டம், வெள்ளகோவில் ஒன்றியம், சின்னமுத்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, 'தேசிய அளவில் தகவல் தொழில்நுட்ப முறைகளைப் பயன்படுத்தி சிறப்பாகக் கல்வியளிக்கும் ஒரே அரசுப்பள்ளி' என்னும் பெருமையைப் பெற்றது.



இதற்கான விருது வழங்கும் விழா கடந்த வாரம், சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் நடைபெற்றது. இதில் ICTACT தலைமை நிர்வாக அதிகாரி சிவக்குமார், எல்காட் நிறுவன நிர்வாக இயக்குனர் அடல்ஆனந்த்., இ.ஆ.ப., தமிழக அரசின் தகவல் தொழில்நுட்பத் துறைச் செயலாளர் ராமச்சந்திரன்., இ.ஆ.ப., மிலிண்ட் கொரட் உள்ளிட்ட அரசு அதிகாரிகளும், ஏராளமான தனியார் நிறுவன அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.



ஆஸ்திரேலியாவின் MBD GROUP முதன்மை நிர்வாக அலுவலர் மோனிகா மல்கோத்ரா, சின்னமுத்தூர் அரசுப்பள்ளிக்கு ''சிறந்த தொழில்நுட்பப் பள்ளி'' (THE BEST TECH SCHOOL AWARD - 2016) விருதை வழங்கிச் சிறப்பித்தார்.



வ்விருதைப் பெற்றது குறித்து மகிழ்ச்சி தெரிவித்த பள்ளி தலைமையாசிரியர் கிருஷ்ணவேணி, விருது பெற உறுதுணையாக இருந்த ஆசிரியர்கள், குழந்தைகள், பெற்றோர் ஆசிரியர் கழகம், கிராமக் கல்விக்குழு மற்றும் பொதுமக்கள் அனைவருக்கும் பள்ளியின் சார்பாக நன்றி தெரிவித்தார்.

Post a Comment

2 Comments

அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..

நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.

2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.

3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.

4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை

Ad Code

Responsive Advertisement