Ad Code

Responsive Advertisement

பிளஸ் 2 பொதுத்தேர்வு இன்று துவக்கம்:8.82 லட்சம் மாணவ, மாணவியர் பங்கேற்பு

தமிழகத்தில், பிளஸ் 2 பொதுத்தேர்வு, இன்று துவங்குகிறது. தேர்வுகளை கண்காணிக்க, அண்ணா பல்கலை பேராசிரியர்கள் தலைமையில் ஆய்வு குழு அமைக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து, தேர்வுத்துறை இயக்குனர் வசுந்தரா தேவி வெளியிட்ட செய்திக்குறிப்பு:

மாணவர்கள், தேர்வு மையத்துக்குள் மொபைல் போன் எடுத்துவரக்கூடாதுஆசிரியர்களும், தேர்வு மையத்துக்குள் மொபைல் போன் எடுத்து வரக் கூடாதுமாணவர்கள் முறைகேட்டில் ஈடுபட்டால் விதிமுறைப்படி தண்டனை வழங்கப்படும்தனியார் பள்ளி தேர்வு மையங்களில், ஒழுங்கீன செயல்களுக்கு உடந்தையாகவோ, ஊக்குவிக்கவோ பள்ளி நிர்வாகம் முயன்றால், தேர்வு மையம் அங்கீகாரம் ரத்து செய்யப்படும்; பள்ளி அங்கீகாரத்தை ரத்து செய்ய, பள்ளிக்கல்வி இயக்குனருக்கு பரிந்துரை செய்யப்படும்.இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்.



சாய்பாபா கோவிலில் சிறப்பு பூஜை:பொதுத்தேர்வில், கடந்த ஆண்டு போல் வினாத்தாளில் பிழை, 'வாட்ஸ் ஆப்'பில் வினாத்தாள், 'லீக்' போன்ற சம்பவங்களோ, முறைகேடுகளோ ஏற்படாமல் இருக்க, பள்ளிக்கல்வி மற்றும் தேர்வுத்துறைஅதிகாரிகள், நேற்று சிறப்பு பூஜை நடத்தினர். சென்னை டி.பி.ஐ., வளாகத்தில் உள்ள சாய்பாபா கோவிலில், 300 பேருக்கு புளியோதரை, தயிர் சாதம், எலுமிச்சை சாதம் என, அன்னதானம் வழங்கப்பட்டது.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement