Ad Code

Responsive Advertisement

மத்திய பட்ஜெட்; கல்வி துறைக்கான முக்கிய அம்சங்கள்

பொது பட்ஜெட் உரையில் கல்வித் துறைக்கான முக்கிய அறிவிப்புகள்:
  • உலகத்தரத்துக்கு, 10 அரசு கல்வி நிறுவனங்கள் மற்றும் 10 தனியார் கல்வி நிறுவனங்கள் மேம்படுத்தப்படும். 
  • பள்ளிச் சான்றிதழ்கள் மற்றும் பட்டயப் படிப்புச் சான்றிதழ்கள் டிஜிட்டல் ஆவணங்களாகவும் வழங்கப்படும்.



  • புதிதாக 62 நவோதயா வித்யாலயா பள்ளிகள் அடுத்த இரண்டு ஆண்டுகளில் தொடங்கப்படும். 

  • பிரதான் மந்திரி கவுஷல் விகாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் 1500 மல்டி திறன் பயிற்சி நிறுவனங்கள் அமைக்கப் படும்.

  • உயர் கல்வியை ஊக்குவிக்கும் நோக்கில், முதல் கட்டமாக ரூ.1,000 கோடிக்கு, உயர் கல்வி நிதி முகமை செயல்படுத்தப்படும்.

  • தொழிற்துறை மற்றும் கல்வித்துறை இணைந்து தேசிய திறன் மேம்பாட்டு வாரியம் சான்றிதழ் அமைக்கப்படும்

  • தொழில் முனைவு கல்வி மற்றும் பயிற்சியானது, 2,200 கல்லூரிகள், 300 பள்ளிகளுக்கு வழங்கப்படும்.

  • திறந்த ஆன்லைன் படிப்புகள் மூலம் 50 தொழில் பயிற்சி மையங்கள் தொடங்கப்படும்

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement