Ad Code

Responsive Advertisement

பட்ஜெட் 2016 எதிரொலி: விலை உயருபவையும் குறைபவையும்

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு கடந்த 2014 மே 26-ம் தேதி பதவியேற்றது. மத்திய அரசில் நிதியமைச்சராக பொறுப்பு வகிக்கும் ஜேட்லி 3-வது முறையாக தனது பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.



வரி விதிப்புகளில் மேற்கொண்டுள்ள மாற்றத்தின் எதிரொலியாக விலை உயருபவை பட்டியல்:
1.ஸ்போர்ட் யுடிலிட்டி வாகனங்கள்
2. சிறிய ரக கார்களுக்கு 1 சதவீத வரி, டீசல் கார்களுக்கு 2.5 சதவீதம், சொகுசு கார்களுக்கு 4 சதவீதம் வரி உயர்த்தப்படுகிறது.
3.வெள்ளி அல்லாத ஆபரணங்கள்
4.பீடி நீங்கலாக சிகரெட் உள்ளிட்ட புகையிலைப் பொருட்கள்.
5.விமானப் பயணச்சீட்டு
6.பிராண்டட் உடைகள்
7.தங்க ஆபரணங்கள்
8.வைரம்
9.ஹோட்டல் உணவுகள்
10.செல்போன் கட்டணம்
11.இன்சூரன்ஸ் திட்டங்கள்
12. ஸ்மார்ட் ஃபோன்கள்
13. திரைப்பட கட்டணம்
14. மினரல் வாட்டர்


குறைபவை:
1.டயாலிஸிஸ் மருத்துவ உபகரணங்கள்
2. பிரெயில் தாள்களுக்கு (பார்வையற்றவர்களுக்கான பிரத்யேக தாள்) வரி விலக்கு.
3. டயாலிஸிஸ் மருத்துவச் செலவு குறைகிறது. காரணம், அனைத்து மாவட்ட ஆஸ்பத்திரிகளிலும் தேசிய இலவச இரத்த சுத்திகரிப்பு சேவை அமலாகிறது.
4. இன்டர்நெட் மோடம்
5. ஆம்புலன்ஸ் சேவை
6. செட்டாப் பாக்ஸ்

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement