Ad Code

Responsive Advertisement

ரூ.251 மொபைலுக்கு புது சோதனை:'காப்பி' அடித்தால் நடவடிக்கை என 'ஆட்காம்' எச்சரிக்கை

'உலகிலேயே மிகவும் மலிவாக, 251 ரூபாய்க்கு ஸ்மார்ட் மொபைல் போனை, விற்பதாக கூறியுள்ள, 'ரிங்கிங் பெல்ஸ்' நிறுவனத்துக்கு, எங்களுடைய மொபைலை, 3,600 ரூபாய்க்கு விற்றுள்ளோம்' என, 'ஆட்காம்' என்ற நிறுவனம் தெரிவித்துள்ளது.


எதிர்ப்புகள்:
'எங்களின் மொபைலை, தங்களது பெயரில், அவர்கள் விற்க முற்பட்டால், சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்கப்படும்' என்றும், ஆட்காம் எச்சரித்துள்ளது.டில்லியை அடுத்துள்ள நொய்டாவைச் சேர்ந்த, 'ரிங்கிங் பெல்ஸ்' நிறுவனம், 251 ரூபாய்க்கு, 'பிரீடம் - 251' என்ற பெயரில், ஸ்மார்ட் மொபைல் போனை வழங்கப் போவதாக அறிவித்ததில் இருந்து பல்வேறு சிக்கல்கள், எதிர்ப்புகளை சந்தித்து வருகிறது. பல்வேறு சந்தேகங்கள்,சர்ச்சைகள் எழுந்துள்ள நிலையில், அமலாக்கப் பிரிவு, வருமானவரித் துறை போன்றவை, இந்த நிறுவனத்தை கண்காணிப்பதாக அறிவித்துள்ளன.அத்துடன், நொய்டாவில் இந்த நிறுவனத்தின் அலுவலகம் அமைந்துள்ள இடம் தொடர்பாகவும், சர்ச்சை எழுந்தது.தொழிற்சாலைக்காக ஒதுக்கப்பட்ட இடத்தில், வர்த்தக பயன்பாட்டுக்கு பயன்படுத்துவதாக நிலத்தின் உரிமையாளருக்கு, 'நோட்டீஸ்' அனுப்பப்பட்டுள்ளது.இந்நிலையில், பிரீடம் - 251 மொபைல், ஆட்காம் நிறுவனத்தின் குறிப்பிட்ட மாதிரியை போன்றே உள்ளதாக ஏற்கனவே குற்றம் சாட்டப்பட்டது.



ரூ.3,600 விலையில்...
இதுதொடர்பாக, ஆட்காம் என்றழைக்கப்படும், 'அட்வான்டேஜ் கம்ப்யூட்டர்ஸ்' நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைவர் சஞ்சீவ் பாட்டியா, நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பு: மற்ற வாடிக்கையாளர்களுக்கு விற்பதை போல, ரிங்கிங் பெல்ஸ் நிறுவனத்துக்கும், எங்களது மொபைலை, 3,600 ரூபாய் விலையில் விற்பனை செய்துள்ளோம். ஆனால், எங்களுடைய மொபைலை, 251 ரூபாய் மொபைல் என, விற்றால், அந்தநிறுவனத்தின் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், எங்களுடைய மொபைல் போல, அவர்களுடைய மொபைலை வடிவமைத்தாலும், தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அறிக்கையில் கூறிஉள்ளார்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement