பிளஸ்-2 தேர்வு இன்று முதல் தொடங்குகிறது. தேர்வில் காப்பி அடிப்பதை கண்காணிக்க4 ஆயிரம் பறக்கும் படைகள் நியமனம் செய்யப்பட்டுள்ளன. ஒழுங்கீன செயல்பாடுகளில் ஈடுபடுவோருக்கு கடுமை யான தண்டனைவழங்கப்பட உள்ளது.
பிளஸ்-2 தேர்வு தமிழகம் முழுவதும் பிளஸ்-2 பொதுத்தேர்வு இன்று (வெள்ளிக்கிழமை) முதல் தொடங்குகிறது. இத்தேர்வு ஏப்ரல் 1-ந்தேதி வரை நடக்கிறது. இதில் தமிழகம்- புதுச்சேரியில் இருந்து மொத்தம் 6 ஆயிரத்து 550 பள்ளிகளில் இருந்து 8 லட்சத்து 39 ஆயிரத்து 697 மாணவ- மாணவிகள் தேர்வு எழுதுகிறார்கள்.
பள்ளி மாணவர்களை தவிர 42,347 தனித்தேர்வர்கள் என மொத்தம் இந்தாண்டு 8 லட்சத்து 82 ஆயிரத்து 44 பேர் தேர்வு எழுதவுள்ளனர். புதுச்சேரியில் 35 தேர்வு மையங்களில், 135 பள்ளிகளை சேர்ந்த 14 ஆயிரத்து 337 மாணவ- மாணவிகள் தேர்வு எழுதுகிறார்கள். தமிழகம் மற்றும் புதுச்சேரி முழுவதும் தேர்வுக்காக மொத்தம் 2 ஆயிரத்து 421 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.தமிழ் வழியில் படித்த 5 லட்சத்து 56 ஆயிரத்து 498 பேர் பிளஸ்-2 தேர்வு எழுத உள்ளனர். இதுதவிர 106 சிறைக்கைதிகள் பாளையங்கோட்டை, திருச்சி மற்றும் புழல்சிறையில் அமைக்கப்பட்டுள்ள தேர்வு மையத்தில் தேர்வு எழுதுகிறார்கள்.
ஒழுங்கீன செயல்பாடுகள் இந்த ஆண்டு முதன்முறையாக ‘ஹால் டிக்கெட்’டில் சிறப்பு அறிவுரைகள் அச்சிடப்பட்டுள்ளன. இதன்மூலம் தேர்வுக்குமுன்பே தேவையான அறிவுரைகளை தெரிந்துகொள்ளலாம்.பிளஸ்-2 தேர்வில் ‘காப்பி’ அடிப்பதை கண்காணிப்பதற்கு தமிழகம் முழுவதும் சுமார் 4 ஆயிரம் பறக்கும் படைகள் மற்றும் நிலையான படை நியமனம் செய்யப்பட்டிருக்கிறது. செல்போனுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.‘பிட்’ அடித்தல், தேர்வு அதிகாரியிடம் முறைகேடாக நடந்துகொள்ளுதல், விடைத்தாள் மாற்றம் செய்தல் மற்றும்ஆள்மாறாட்டம் செய்தல் போன்ற ஒழுங்கீன செயல்களில் ஈடுபடும் மாணவர்களுக்கு கடுமையான தண்டனைகள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை