Ad Code

Responsive Advertisement

தமிழ் மொழியின் பெருமையை பரப்புவேன்: உறுதியுடன் கூறும் அரசுப்பள்ளி மாணவன்

தித்திக்கும் தமிழை திறம்பட பேசுவது, முத்துமுத்தாய் எழுதுவது, இன்றைய பள்ளி குழந்தைகளுக்கு ஒரு சவாலாகவே மாறியுள்ளது. குழந்தைகளின் தமிழ் திறனுக்கு, ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் பயிற்சி வழங்கி வருகிறோம்.


சவால்களை எதிர்கொள்வதிலும், அரசு பள்ளிகளும் முன்னேறித்தான் வருகின்றன என்பதை அடையாளம் காட்டும் வகையில், தமிழை தம் பிஞ்சு மொழியால், கம்பீரமாய் வெளிப்படுத்தி பரிசு வென்றுள்ளார் அரசுப்பள்ளி மாணவர் கவுதம்.உடுமலை ஒன்றியத்தின் கடைக்கோடியிலுள்ளது சின்னபொம்மன் சாளை என்னும் கிராமம். இங்குள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில், 38 குழந்தைகள் படிக்கின்றனர்.



படிப்பறிவில்லாத பெற்றோர்கள், பள்ளிகளை மட்டுமே தங்கள் குழந்தைகளின் எதிர்காலமாய் எண்ணி அனுப்புகின்றனர். இக்குழந்தைகளுக்கு மொழித்திறனை வளர்ப்பது முதல், கல்வியில் முன்னேற்றம் காண்பது வரை, அடிப்படைக்கல்வியை திறம்பட வழங்கி வருகிறது இப்பள்ளி.


இதற்கு எடுத்துக்காட்டாய் உள்ளனர் இப்பள்ளி மாணவர்கள். இப்போட்டியில் பங்கேற்க, பின்வாங்கும் நிலையில் இருந்த அரசு பள்ளிகள் பலவும், இப்போது பரிசுகளை குவிக்கத்துவங்கியுள்ளன.


இதன் வரிசையில், சின்னபொம்மன்சாளை பள்ளியில் நான்காவது படிக்கும் மாணவர் கவுதம் இரண்டாம் பரிசு வென்றுள்ளார். 'வாழ்க்கை என்பது ஒரு வனாந்தர பூமியல்ல, அது வண்ண கோலங்களை சுமந்து கொண்டு, வா என்று அழைக்கும் வசந்த காடு' என துவங்கி பத்து நிமிடத்துக்கும் மேலாக, தமிழின் பெருமை மாறாமல், 'ஆண் என்ன பெண் என்ன சமதர்மமான சமுதாயத்திலே' என்ற தலைப்பை உரத்த குரலில் ஓங்கி ஒலிக்க செய்துள்ளார் இம்மாணவர்.


சாக்ரடீஸ் முதல் அப்துல் கலாம் வரை, காரைக்கால் அம்மையார் முதல் மலாலா வரையிலும் தமது பேச்சால் கண் முன் நிறுத்தி கவர்ந்துள்ளார்.


மாணவர்களின் வழிகாட்டி ஆசிரியர்கள் என்பதை முழுமையாக வெளிப்படுத்தி வருகின்றனர் இப்பள்ளி ஆசிரியர்கள். அரசுப்பள்ளிகளில் ஒளிந்திருக்கும் திறமைகளை, வெளிப்படுத்தும் திறவு கோலாக ஆசிரியர்கள் இருக்க வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாய் விளங்குகின்றனர். 


ஒரு மாணவனை மட்டுமின்றி, ஒவ்வொரு குழந்தையையும் பேச்சப் போட்டிக்கும், பல்வேறு கலை இலக்கிய போட்டிகளுக்கும் தயார்படுத்தி, மாணவர்களின் திறமைகளை வெளிப்படுத்துகின்றனர்.அடிப்படை கல்வி என்பது அனைத்தையும் உள்ளடக்கியது என உணர்ந்து, மாணவர்களை முன்னோக்கி கொண்டு செல்ல வேண்டும் என்பதே பெற்றோரின் எதிர்பார்ப்பாகவும் உள்ளது.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement