கல்வித் தகுதிக்கு ஏற்ப மாற்றுப்பணி கோரி, குழந்தை தொழிலாளர் திட்ட ஆசிரியர்கள், தொழிலாளர் நலத்துறை அலுவலகத்தில், காலவரையின்றி காத்திருக்கும் நுாதன போராட்டத்தை துவக்கி உள்ளனர். தமிழகத்தில், குழந்தை தொழிலாளர் திட்ட பள்ளிகளில், ஆசிரியர், பள்ளி எழுத்தர்என, 1,254 பேர் பணியாற்றி வருகின்றனர்.
இவர்கள் முறையே, 4,500 ரூபாய், 3,500 ரூபாய் சம்பளம் பெற்று வருகின்றனர். ஊதியத்தை உயர்த்த வேண்டும்; கல்வித் தகுதிக்கு ஏற்ப மாற்றுப்பணி வழங்க வேண்டும் எனக் கோரி, திட்ட ஆசிரியர்கள், நேற்று, தொழிலாளர் நலத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அவர்களுடன், தொழிலாளர் நலத்துறை இணைஆணையர், பேசினார். அவர் எழுத்துப்பூர்வமாக எந்த உறுதியும் அளிக்க மறுத்ததால், திட்ட ஆசிரியர்கள் காலவரையின்றி காத்திருக்கும் நுாதன போராட்டத்தை துவக்கினர்.
இது குறித்து, தேசிய குழந்தை தொழிலாளர் பள்ளி ஆசிரியர் சங்க தலைவர் அழகுஜோதி கூறுகையில், ''தொழிலாளர் நலன் காக்கும் துறையில் பணியாற்றும் நாங்கள், குழந்தை தொழிலாளர்களை விட மிக மோசமான நிலையில் உள்ளோம். நல்லசம்பளத்தில் மாற்றுப்பணி என்பதே எங்கள் கோரிக்கை. கோரிக்கையை அரசு ஏற்கும் வரை,இரவு, பகலாக அலுவலகத்திலேயே காத்திருப்போம்;எங்களுக்கு வேறு வழி தெரியவில்லை,'' என்றார்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை