Ad Code

Responsive Advertisement

தனியார் பள்ளி கட்டணம் 40 சதவீதம் உயர்வு

தனியார் பள்ளிகளின் அடுத்த, மூன்று ஆண்டுகளுக்கான கல்விக் கட்டணத்தை, அரசு வெளியிட்டு உள்ளது. இதில், கடந்த ஆண்டை விட, 40 சதவீதம் அதிக கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தனியார் சுயநிதி பள்ளிகளுக்கு கல்விக் கட்டணம் நிர்ணயிக்க, நீதிபதி சிங்காரவேலர் தலைமையில், கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது.

இந்த கமிட்டியினரால், பள்ளிகளின் உள்கட்டமைப்பு அடிப்படையில், கல்விக் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.ஏற்கனவே, 2015 - 16 வரை, மூன்று ஆண்டுகளுக்கான கட்டணம் நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இந்த கல்வி ஆண்டில், கட்டணநிர்ணயம் முடிவதால், அடுத்த கல்வி ஆண்டுக்கான கட்டணத்தை, சிங்காரவேலர் கமிட்டி நிர்ணயித்துள்ளது. இந்த கட்டண விவரம், நேற்று அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது.


இதன்படி, அடுத்த, மூன்று ஆண்டுகளுக்கான பட்டியலில், கடந்த ஆண்டை விட, 20 - 40 சதவீதம் வரை கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. மற்ற மாவட்டங்களை விட, சென்னையின் பள்ளிகளில் கட்டணம் அதிகமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement