Ad Code

Responsive Advertisement

பொதுத் தேர்வு மாணவர்களுக்கு 'யுனிக் ஐ.டி.,' : தேர்வுத்துறை ஏற்பாடு

''பத்தாம் வகுப்பு, பிளஸ்2 பொது தேர்வு எழுதும் மாணவர்களுக்கு 'யுனிக் ஐ.டி.,' எண்கள் (தனித்துவ அடையாள எண்) வழங்கப்படவுள்ளது,'' என தேர்வுத்துறை இணை இயக்குனர் அமுதவல்லி தெரிவித்தார். மதுரையில் அவர் கூறியதாவது:


பத்தாம் வகுப்பு பொது தேர்வை இந்தாண்டு 10 லட்சத்து 23 ஆயிரத்து 538 பேர் ரெகுலரிலும், 45 ஆயிரம் பேர் தனித் தேர்வர்களாகவும், பிளஸ்2 தேர்வை எட்டரை லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்களும் எழுதவுள்ளனர். பொது தேர்வு விடைத்தாள் முதல் பக்கத்தில் (டாப் சீட்) மாணவர்களின் புகைப்படம், 'பார்கோடிங்' முறை என அடுத்தடுத்து தேர்வு துறை சார்பில் புதிய நடைமுறை அமல்படுத்தப்பட்ட நிலையில், இந்தாண்டு 14 இலக்கம் கொண்ட 'யுனிக் ஐ.டி.,' எண் மாணவர்களுக்கு வழங்கப்படவுள்ளது.



இதில், எந்த வகுப்பு, தேர்வு எழுதும் மாதம், ஆண்டு, மாவட்டம் 'கோடு' எண், ரெகுலர் என்றால் 'ஆர்', பிரைவேட் என்றால் 'பி' ஆகிய எழு குறியீடுகளுடன், ஏழு இலக்க எண்களும் வழங்கப்படும். இதன் மூலம் மார்ச் தேர்வுக்கு பின் அக்டோபரில் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தனியாக பதிவுஎண் வழங்காமல், 'யுனிக் ஐ.டி.,' எண்களையே பயன்படுத்தலாம். இதன்மூலம் மாணவர்களுக்கு 'ஒருங்கிணைந்த மதிப்பெண் சான்றிதழ்' கிடைக்கும். பத்தாம் வகுப்பில் வழங்கும் இந்த எண்ணை, பிளஸ் 2 தேர்விலும் பயன்படுத்த திட்டமிடப்பட்டு வருகிறது.



இந்த ஆண்டு முதல் மாணவர்களின் 'பதிவு எண்' போன்று விடைத்தாளின் முதல் பக்கத்திலும், மதிப்பெண் சான்றிதழிலும் 'யுனிக் ஐ.டி.,' எண்ணும் இடம்பெறும். பிளஸ் 2 மாணவர்களுக்கு 90 சதவீதம் இப்பணி முடிந்தது. பிப்ரவரிக்குள் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கும் இந்த எண் வழங்கப்படும், என்றார். முதன்மை கல்வி அலுவலர் ஆஞ்சலோ இருதயசாமி உடனிருந்தார். 

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement