Ad Code

Responsive Advertisement

மக்கள் தொகை பதிவேடு பணி: ஆசிரியர்களுக்கு தடை கோரி வழக்கு: அறிக்கை கோரும் உயர்நீதிமன்றம்

'ஆதார்' எண்களை, தேசிய மக்கள் தொகை பதிவேட்டுடன் இணைக்கும் பணியில் ஆசிரியர்களை ஈடுபடுத்த தடை கோரிய வழக்கில், 'அரசு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்' என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.


'ஆதார்' அட்டை எண்களை, தேசிய மக்கள்தொகை பதிவேட்டுடன் (என்.பி.ஆர்.,) இணைக்கும் பணியில் ஆசிரியர்களை ஈடுபடுத்துகின்றனர். மாணவர்களின் கல்வி பாதிக்கிறது. கட்டாயக் கல்வி உரிமைச் சட்டப்படி, ஆசிரியர்களை கல்விசாராத பணியில் ஈடுபடுத்தக்கூடாது. என்.பி.ஆர்.,பணியால் பள்ளி வேலைநாட்கள் மேலும் குறையும். 'ஆதார்' எண்ணை, என்.பி.ஆருடன் இணைக்கும் பணியில், ஆசிரியர்களை ஈடுபடுத்த தடை விதிக்க வேண்டும். இவ்வாறு, பாலசந்தர் மனு செய்திருந்தார்.


மனுதாரர் வழக்கறிஞர் லஜபதிராய் ஆஜரானார்.நீதிபதிகள் எஸ்.மணிக்குமார், சி.டி.செல்வம் கொண்ட அமர்வு, 'தமிழக பள்ளிக் கல்வித்துறை, வருவாய்த்துறை செயலர்கள் பிப்.,8ல் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்' என உத்தரவிட்டது 

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement