Ad Code

Responsive Advertisement

2016 - 17 பட்ஜெட் : பள்ளி கல்வித்துறை அறிவிப்புகள்

பிப்.16-தமிழ்நாடு சட்டசபையில் இன்று பட்ஜெட் தாக்கல் செய்து நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறியதாவது:2016–2017 ஆம் ஆண்டிற்கான இடைக்கால வரவு–செலவுத் திட்ட மதிப்பீடுகளில் பள்ளிக்கல்வித் துறைக்கென 24,820 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.


கடந்த ஐந்து ஆண்டுகளில், 221 புதிய ஆரம்பப் பள்ளிகளைத் தொடங்கியுள்ளதோடு, 112 ஆரம்பப் பள்ளிகளை நடுநிலைப் பள்ளிகளாகவும், 810 நடுநிலைப்பள்ளிகளை உயர்நிலைப் பள்ளிகளாகவும், 402 உயர்நிலைப் பள்ளிகளை மேல்நிலைப் பள்ளிகளாகவும் தரம் உயர்த்தி இந்த அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. 


பத்தாவது மற்றும் பன்னிரெண்டாவது வகுப்புகளில் பயிலும் மாணவர்களின் தேர்ச்சி விகிதம் 2015–ம் ஆண்டில் முறையே, 92.90 சதவீதம் மற்றும் 90.60 சதவீதமாக உயர்ந்துள்ளது.2016–2017ஆம் ஆண்டிற்கான இடைக்கால வரவு–செலவுத் திட்ட மதிப்பீடுகளில் அனைவருக்கும் கல்வி இயக்கத்திற்காக 2,329.15 கோடி ரூபாயும், தேசிய இடைநிலைக் கல்வி இயக்கத்திற்காக 1,139.52 கோடி ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.


தரமான கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில், 2011 ஆம் ஆண்டு முதல், இந்த அரசு மடிக்கணினிகள், பாடப் புத்தகங்கள், நோட்டுப் புத்தகங்கள், கல்வி உபகரணங்கள், நான்கு சீருடைத் தொகுப்புகள், காலணிகள், புத்தகப் பைகள், பேருந்து கட்டணச் சலுகைகள், மிதிவண்டிகள் போன்றவற்றை 12,475 கோடி ரூபாய் செலவில் மாணவ–மாணவியருக்கு அளித்துள்ளது.


முதல் தலைமுறை பட்டதாரி மாணவர்களுக்கு கல்விக் கட்டணத்தை திரும்ப வழங்கும் திட்டத்தின் கீழ், கடந்து ஐந்து ஆண்டுகளில் 2,84,609 மாணவர்களுக்கு 2,544 கோடி ரூபாய் வழங்கப்பட்டு, அவர்கள் நிதிச் சுமையின்றி தொடர்ந்து உயர்கல்வி பயின்று வருகின்றனர். இத்திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்துவதற்காக இடைக்கால வரவு–செலவுத் திட்ட மதிப்பீடுகளில் 579 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.இடைக்கால நிதிநிலை அறிக்கையில் உயர் கல்விக்கென 3,821 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement