அங்கன்வாடி மற்றும் குழந்தைகள் காப்பகப் பணியாளர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப் படுகின்றன.இதுகுறித்து அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:
சென்னை மாவட்டத்தில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டத்தில் அங்கன்வாடி மற்றும் குழந்தைகள் காப்பகப் பணியாளர் (மாத சம்பளம் ரூ.3ஆயிரம்), காப்பக உதவியாளர் (மாத சம்பளம் ரூ.1,500) பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
காப்பகப் பணியாளர் பணியிடத்துக்கு வயது 25 முதல் 35 வயது வரை, விதவை மற்றும் ஆதரவற்றவராக இருந்தால் 40 வயது, பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். காப்பக உதவியாளர் பணியிடத்துக்கு 20 வயது முதல் 40 வயது வரை, விதவை மற்றும் ஆதரவற்றவராக இருந்தால் 45 வயது, தமிழ் எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.உரிய விண்ணப்பங்கள் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டப் பணிகள் இணையதளமான www.icds.tn.nic.in ல் இருந்தும் பதிவிறக்கம் செய்தும் விண்ணப்பிக்கலாம். கூடுதல் விவரங்களுக்கு அந்தந்தப் பகுதி குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலர் அல்லது தேனாம்பேட்டை, 2/124, தியாகராயா சாலையில் உள்ள இயக்குனர், குழும இயக்குனர் மற்றும் தேர்வுக் குழுத் தலைவரை அணுகலாம்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை