அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் ஆண்டு விழா நடத்த நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. தனியார் பள்ளிகளுக்கு நிகராக அரசுப் பள்ளிகளும் தரம் உயர்த்தப்பட்டு வருகிறது. மேலும், அரசுப் பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கையை அதிகரிக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
பள்ளி மேலாண்மைக் குழு, கிராமக் கல்விக் குழுவினரின் பங்களிப்பை ஊக்குவிக்கவும், மாணவ, மாணவியரின் தனித் திறமையை வெளிக்கொண்டு வரவும், பள்ளிகளில் ஆண்டு விழா நடத்தப்பட்டது.
கடந்த பல ஆண்டுகளாக ஆண்டு விழா நடத்தப்படாத நிலையில், கடந்த ஆண்டு அனைத்து அரசு தொடக்கப் பள்ளி, நடுநிலைப் பள்ளிகளில் ஆண்டு விழா நடத்த அரசு உத்தரவிட்டது. இதற்காக, அந்தந்தப் பள்ளிகளுக்கு நிதி வழங்கப்பட்டது. உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் ஆண்டு விழா நடத்தப்படுவதில்லை. ஆனால், சில தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை மிக குறைந்த அளவே இருந்ததால் அங்கு ஆண்டு விழா நடத்தப்படவில்லை.எனவே, நிகழாண்டு தொடக்கப் பள்ளிகளில் 100 மாணவர்களும், நடுநிலைப் பள்ளிகளில் 150 மாணவர்களுக்கும் அதிகமாக படிக்கும் பள்ளிகளில் மட்டும் ஆண்டு விழா நடத்த முடிவு செய்யப்பட்டது.
இதன்படி, நாமக்கல் மாவட்டத்தில் 150 பள்ளிகளில் ஆண்டு விழா நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.இதற்காக, தொடக்கப் பள்ளிகளுக்கு தலா ரூ.5,000-மும், நடுநிலைப் பள்ளிகளுக்கு தலா ரூ.6,000-மும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. சட்டப்பேரவைத் தேர்தல் நடக்க உள்ளதால், பிப்ரவரி மாதத்துக்குள் ஆண்டு விழாக்களை நடத்தி முடிக்க வேண்டும் என சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளதாக கல்வித் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை