Ad Code

Responsive Advertisement

VAO தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு -TNPSC

விஏஓ தேர்வுக்கு விண்ணப்பிக்க டிச.31 வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது என்று தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய செயலாளர் மா.விஜயகுமார் இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில்,

கிராம நிர்வாக அதிகாரி (வி.ஏ.ஓ.) பதவியில் 813 காலியிடங்களை நிரப்புவதற்கு அடுத்த ஆண்டு பிப்ரவரி 14-ஆம் தேதி போட்டித் தேர்வு நடத்தப்படும் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) அறிவித்துள்ளது. இந்தத் தேர்வை எழுத ஆன்லைனில் விண்ணப்பிக்க இன்று டிசம்பர் 14-ஆம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டிருந்தது.


தமிழகம் முழுவதும் பெய்த கனமழை மற்றும் அதைத்தொடர்ந்து ஏற்பட்ட அசாதாரண சூழல் காரணமாக தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி டிசம்பர் 31 ஆம் தேதி வரையும், விண்ணப்பக் கட்டணம் செலுத்த கடைசி தேதி (ஜன.2) வரையும் நீட்டிக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement