Ad Code

Responsive Advertisement

7–வது சம்பள கமிஷன் அறிக்கையை அமல்படுத்துவது 6 மாதம் தாமதமாகும்?: குறைபாடுகளை நீக்க தீவிர ஆலோசனை

மத்திய அரசு ஊழியர்களுக்கு 10 ஆண்டுகளுக்கு ஒரு தடவை சம்பள விகிதம் சீரமைக்கப்படும்.இதற்காக மத்திய அரசு ‘‘சம்பள கமிஷன்’’ ஏற்படுத்தி ஆய்வு செய்து, அதனிடம் அறிக்கை பெற்று நடவடிக்கை எடுக்கும் .மத்தியில்பா.ஜ.க. ஆட்சி அமைந்ததும் மத்திய அரசு ஊழியர்களின் சம்பளத்தை, விலைவாசி உயர்வுக்கு ஏற்ப சீரமைக்க 7–வது சம்பள கமிஷன் அமைக்கப்பட்டது. 

அந்த கமிஷன் மாநில அரசுகள் மற்றும் பல்வேறு தொழிற்சங்கத்திடம் ஆலோசனை நடத்தி அறிக்கை தயார் செய்து மத்திய அரசிடம் கொடுத்தது.அந்த அறிக்கையின் அடிப்படையில் 2016–ம் ஆண்டு 7–வது சம்பள கமிஷன் அறிக்கையின் பரிந்துரைகள் அமலுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது.


ஆனால் 7–வது சம்பள கமிஷன் பரிந்துரைகளில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கும் மற்ற அதிகாரிகளுக்கும் சம்பள விகிதத்தில் மிகப் பெரும் வித்தியாசம் இருப்பதாக அதிருப்தி எழுந்துள்ளது.இது தவிர சம்பள உயர்வால் தங்களுக்கு பெரும் நிதிச்சுமை ஏற்படும் என்று பல மாநில அரசுகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. மேலும் போக்குவரத்து அலவன்சு உயர்த்தப்படாததற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்தகையை குறைகளை, முரண்பாடுகளை சரி செய்ய மத்திய அமைச்சக செயலாளர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழு மாநில அரசுகள் மற்றும் முக்கிய தொழிற்சங்கங்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறது.அதில் ஒருமித்த கருத்து உருவானதும் 7–வது சம்பள கமிஷன் அறிக்கை பரிந்துரைகள் அமலுக்கு வரும். இதனால் மத்திய அரசு ஊழியர்கள் புதிய சம்பள உயர்வை பெறுவது 6 மாதம் முதல் ஓராண்டு வரை தள்ளிப் போகலாம் என்று கூறப்படுகிறது. 

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement