Ad Code

Responsive Advertisement

மழைநீர் தேங்கி உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும்: கல்வித்துறை இயக்குனர் உத்தரவு

மழைநீர் தேங்கி உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை விட வேண்டும் என பள்ளிகளுக்கு பள்ளி கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன் உத்தரவிட்டுள்ளார்.

தமிழகத்தில் பரவலாக வடகிழக்கு பருவமழை பெய்து வந்த நிலையில், பெரும்பாலும் உள்ள பள்ளிகளில் தண்ணீர் புகுந்தது. இதனால், மாணவர்களின் நலன் கருதி மூன்று மாவட்டங்களிலும் உள்ள பள்ளி, கல்லூரிக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.


இதையடுத்து, பள்ளி கல்லூரிகள் இன்று திறக்கப்பட்டன. இந்நிலையில், வளசரவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பள்ளிகளில் இன்னும் மழைநீர் தேங்கி உள்ளதை அடுத்து, மழை நீர் தேங்கி உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட வேண்டும் என்று பள்ளி கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன் உத்தரவிட்டுள்ளனார்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement