வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் தேர்ச்சியடையும் வகையில் குறைந்தபட்ச பாடத்திட்டப் புத்தகம் வழங்கப்படும் என்று பள்ளி கல்வித்துறை செயலர் சபீதா அறிவித்துள்ளார். தமிழக பள்ளி கல்வித்துறை செயலர் சபீதா செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தமிழகத்தில் கடந்த மாதம் பரவலாக பெய்த வடகிழக்கு பருவமழை காரணமாகப் பள்ளி, கல்லூரிகளுக்குத் தொடர்ச்சியாக 33 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டது.
இந்நிலையில், பள்ளிகளில் சூழ்ந்த வெள்ள நீர் சீர்ப்படுத்தப்பட்ட நிலையில், இன்று சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர் ஆகிய நான்கு மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டு, செயல்படத் துவங்கியுள்ளன.
வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு நாளை வழங்குவதற்காக பாடப்புத்தகங்கள், சீருடைகள் தயாராக உள்ளது. வகுப்பறையில் பழுதடைந்த நாற்காலிகள், மேசைகள் மாற்றப்பட்டுள்ளன. பள்ளிகளில் நாளை மருத்துவ முகாம் நடத்தப்படுகிறது.
மேலும், 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களின் நலன் கருதி குறைந்தபட்ச பாடத்திட்ட புத்தகம் வழங்கப் பள்ளி கல்வித்துறை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக பள்ளிகல்வித்துறை செயலர் சபீதா அறிவித்துள்ளார்.
பொதுத்தேர்வுகளை எதிர்கொள்ளும் வகையில் மாணவர்களுக்கு உளவியல் ரீதியான ஆலோசனைகளும் வழங்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை