Ad Code

Responsive Advertisement

பாடப் புத்தகங்கள் இழந்த சுயநிதி பள்ளி மாணவர்களுக்கு புதிய வசதி

மழையால் பாட நூல்களை இழந்த சுயநிதி பள்ளி மாணவர்கள், இணையதளம் வாயிலாக புத்தகங்களை பதிவு செய்து தபால் மூலம் வீட்டு முகவரியிலேயே பெற்றுக் கொள்ள வசதி செய்யப்பட்டுள்ளது.


இது குறித்து, தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பில், கடுமையான வடகிழக்குப் பருவ மழையின் காரணமாக, பாடநூல்களை இழந்த மாணவ-மாணவிகளுக்கு நூல்கள் கிடைக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.


சுயநிதிப் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் மழை வெள்ளத்தில் பாடநூல்களை இழந்திருந்தால், அவர்களுக்கு தமிழ்நாடு பாடநூல்-கல்வியியல் பணிகள் கழக இணையதளத்தின் வழியாக பதிவு செய்து அவர்களின் வீட்டு முகவரியிலேயே பாடநூல்களை பெற்றுக் கொள்ளலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement