Ad Code

Responsive Advertisement

யு.பி.எஸ்.சி தேர்வு தேதியை மாற்ற முடியாது: மத்திய அரசு

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வுகளை, தமிழக வெள்ளம் காரணமாக மாற்றி அமைக்க முடியாது என மத்திய அரசு கூறியுள்ளது.


மதுராந்தகத்தைச் சேர்ந்த வினோத் குமார் என்பவர் இன்று காலை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி சஞ்சய் கிஷன் கவுலை சந்தித்து ஒரு மனு அளித்தார். அதில் தமிழகம் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளதால், மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வுகளை (யு.பி.எஸ்.சி. மெயின்) தள்ளிவைக்க வேண்டும் என்றார்.

இதற்கு மத்திய அரசும், பணியாளர் தேர்வாணையமும் மதியத்திற்குள் பதிலளிக்குமாறு தலைமை நீதிபதி உத்தரவிட்டார். பிற்பகலில் நீதிபதி முன்பு ஆஜரான மத்திய அரசு வழக்கறிஞர் ஜி.ராஜகோபால், யு.பி.எஸ்.சி. வழக்கறிஞர் அருணன் ஆகியோர், தமிழகத்திலிருந்து 855 பேர் மட்டுமே தேர்வு எழுதுகின்றனர். மேலும், மனுதாரர் தேர்வு எழுதவில்லை என்றனர்.



மேலும், தேர்வு நடைபெறும் மையங்கள் ஏதும் வெள்ளத்தால் பாதிக்கப்படவில்லை என்றும் தெரிவித்தனர். இதையடுத்து வினோத் குமாரின் முறையீட்டை தள்ளுபடி செய்த நீதிபதிகள் சஞ்சய் கிஷன் கவுல், புஷ்பா சத்தியநாராயண ஆகியோர்,  இதை வழக்காக தாக்கல் செய்தால் விசாரிப்பதாகவும் கூறினர்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement