Ad Code

Responsive Advertisement

2 நாட்களுக்கு கன மழை

'தமிழக கடலோர மாவட்டங்கள், தென் மாவட்டங்கள், உள் மாவட்டங்களில், இரு நாட்களுக்கு மிக கனமழை பெய்யும்; சென்னையில், கன மழைக்கு வாய்ப்பில்லை' என, வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து, சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் கூறியதாவது: காற்றழுத்த தாழ்வு நிலைவங்கக் கடலில், லட்சத் தீவு மற்றும் மாலத்தீவு பகுதிகளில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு நிலை, லட்சத்தீவு மற்றும் குஜராத் கடற்பகுதி அருகே நிலை கொண்டுள்ளது.

புதிதாக உருவான காற்றழுத்த தாழ்வு நிலை, தென்மேற்கு வங்கக் கடலில், வட தமிழகம் மற்றும் இலங்கை அருகே, காற்றழுத்த தாழ்வு நிலையாக நீடிக்கிறது.இதனால், நேற்று முன்தினம் மற்றும் நேற்று காலை, 8:30 மணி நேர நிலவரப்படி, 24 மணி நேரத்தில், தமிழகம், புதுச்சேரியில், பெரும்பாலான பகுதிகளில் மழை பெய்துள்ளது.பெரும்பாலான இடங்களில் அடுத்த 24 மணி நேரத்திற்குள், கடலோர மாவட்டங்களில், பெரும்பாலான இடங்களிலும், பிற மாவட்டங்களில், சில இடங்களிலும், மழைக்கு வாய்ப்பு உள்ளது.


சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் தவிர்த்து, பிற மாவட்டங்களில், ஓரிரு இடங்களில், கனமழை, மிக கன மழை பெய்யக்கூடும்; இரு நாட்களுக்கு மழை இருக்கும்.சென்னையில், வானம் மேக மூட்டத்துடன் காணப்படும்; ஒருசில இடங்களில், விட்டு விட்டு மழை பெய்யும்.
இவ்வாறு அவர் கூறினார்.


சென்னையில் 130 சதவீதம் அதிகம்:


* வடகிழக்கு பருவமழை காலத்தில், தமிழகத்தில் சராசரியாக, 39 செ.மீ., மழை பெய்யும். இந்த ஆண்டில், இதுவரை, 64 செ.மீ., மழை பெய்துள்ளது. இது வழக்கத்தை விட, 65 சதவீதம் அதிகம்
* சென்னையில், இந்த காலகட்டத்தில், சராசரியாக, 70 செ.மீ., மழை பெய்யும். இந்த ஆண்டில், இதுவரை, 161 செ.மீ., மழை பதிவாகி உள்ளது. இது, 130 சதவீதம் அதிகம்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement