Ad Code

Responsive Advertisement

மாற்றுத்திறனாளிகள் ஒதுக்கீட்டில்பணிநியமன முறைகேடுஉயர்நீதிமன்றத்தில் அரசு ஒப்புதல்

ஆரோக்கியத்துடன் உள்ளவர்கள் மாற்றுத்திறனாளிகளுக்குரிய போலி சான்று சமர்ப்பித்து, உள்ளாட்சி பணியில் சேர்ந்துள்ளதை கண்டுபிடித்து, 10 பேரை கைது செய்துள்ளோம்,' என அரசு வழக்கறிஞர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தெரிவித்தார். 

அரசு பதில் மனு தாக்கல் செய்ய, நீதிபதிகள் உத்தரவிட்டனர்.திருநெல்வேலி நாரணம்மாள்புரம் சண்முகம் தாக்கல் செய்த பொதுநல மனு:உடல் ஆரோக்கியத்துடன் உள்ள சிலர், திருநெல்வேலி உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத் திறனாளிகளுக்குரிய ஒதுக்கீட்டில் போலி சான்றிதழ் மூலம், பணி நியமனம் பெற்றுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. இதுபோல் தமிழகத்தில் பிற அரசுத்துறைகளில் நடந்திருக்க வாய்ப்புள்ளது.

தகுதியான மாற்றுத்திறனாளிகளில் பலர் வறுமையில் வாடுகின்றனர். மாற்றுத்திறனாளிகளுக்கான இட ஒதுக்கீட்டின் கீழ், பணியில் சேர்ந்தவர்களின் சான்றிதழின் உண்மைத் தன்மையை ஆய்வு செய்ய வேண்டும். திருநெல்வேலியில் போலி சான்றிதழ் மூலம் பணி நியமனம் தொடர்பாக சி.பி.ஐ.,விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு, சண்முகம் மனு செய்திருந்தார்.

நீதிபதிகள் வி.ராமசுப்பிரமணியன், என்.கிருபாகரன் கொண்ட அமர்வு விசாரித்தது. அரசு சிறப்பு வழக்கறிஞர் செல்வராஜ்: திருநெல்வேலியில் உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகள் ஒதுக்கீட்டில் பணியில் சேர, 
உண்மைத்தன்மை சான்று வழங்கும் மருத்துவ அதிகாரியின் கையெழுத்துபோல் இட்டு, போலி சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. சிலர் பிடிபட்டுள்ளனர். 

இதுபோல் விருதுநகர், துாத்துக்குடி, கன்னியாகுமரி உட்பட சில மாவட்ட உள்ளாட்சி அமைப்புகளிலும் மாற்றுத்திறனாளிகளுக்குரிய ஒதுக்கீட்டின் கீழ், தகுதியற்ற சிலர் போலி சான்றிதழ்கள் மூலம் பணி நியமனம் நடந்துள்ளது தெரியவந்துள்ளது. 71 பேரின் சான்றிதழ் போலியானதாக இருக்கலாம் என சந்தேகிக்கிறோம். 40 பேரிடம் விசாரணை நடக்கிறது. போலி சான்றிதழ் சமர்ப்பித்து, பணியில் சேர்ந்த 10 பேரை கைது செய்துள்ளோம். சி.பி.சி.ஐ.டி.,போலீசார் தனிப்படை மூலம் விசாரிக்கின்றனர் என்றார்.

நீதிபதிகள்,'நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல்துறை செயலர், சி.பி.சி.ஐ.டி.,-ஏ.டி.ஜி.பி.,3 வாரங்களில் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும்,' என்றனர். மனுதாரர் வழக்கறிஞர் அழகுமணி ஆஜரானார்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement