பி.எஸ்சி., 'அக்ரி' பட்டம் பெற்றிருந்தால் மட்டுமே இனி உரக்கடை வைக்க லைசென்ஸ் பெற முடியும், என்று மத்திய வேளாண் அமைச்சகம் புதிய உத்தரவு பிறப்பித்துள்ளது.
மருந்துக்கடை நடத்துபவர்கள் பி.பார்மசி பட்டம் பெற்று இருக்க வேண்டும் என்ற விதிமுறையை இந்திய மருத்துவ கழகம் மருத்துவத்துறையில் அமல்படுத்தி இருப்பது போல், இனிமேல் உரக்கடை வைக்க லைசென்ஸ் பெற வேண்டும் என்றால், அதற்கு விண்ணப்பிப்பவர் கண்டிப்பாக பி.எஸ்சி., அக்ரி பட்டம் பெற்று இருக்க வேண்டும், என வேளாண்மைத் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
அதன்படி, பி.எஸ்சி., அக்ரி அல்லது வேளாண் பட்டயப்படிப்பு அல்லது பி.எஸ்சி. கெமிஸ்ட்ரி பட்டம் பெற்றவர்கள் மட்டுமே உரக்கடை லைசென்ஸ் கேட்டு விண்ணப்பிக்க வேண்டும். மற்றவர்களுக்கு லைசென்ஸ் வழங்கப்பட மாட்டாது.
மத்திய அரசின் இந்த உத்தரவுப்படி ஏற்கனவே உரக்கடை வைத்திருப்பவர்களுக்கு புதுப்பித்தலுக்கு எந்த பிரச்னை இல்லை. அவர்களின் லைசென்ஸ் வழக்கம் போல செல்லுபடியாகும். இனிவரும் காலங்களில் புதிதாக லைசென்ஸ் பெறுவதற்கு மட்டுமே இந்த புதிய உத்தரவு கடைப்பிடிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. மத்திய அரசின் இந்த உத்தரவால் உரக்கடை உரிமையாளர்களையும், உரக்கம்பெனிகளையும் அதிர்ச்சி அடைந்துள்ளன.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை