Ad Code

Responsive Advertisement

முதல்வர் பிறந்த நாளை முன்னிட்டுவினா - விடை வங்கி புத்தகம் வினியோகம்

முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி, 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2, பொதுத்தேர்வு எழுதும், 20 ஆயிரம் மாணவர்களுக்கு, வினா - விடை வங்கி புத்தகம் வழங்கும் விழா, அ.தி.மு.க., சார்பில் பொள்ளாச்சியில் நடந்தது. 

துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் பேசுகையில் கூறியதாவது:

மாணவர்களின் கல்வி முன்னேற்றத்திற்காக, பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வரும் ஒரே முதல்வர் ஜெயலலிதா தான். அதிலும், மடிக்கணினி வழங்கும் திட்டம், மாணவர்களுக்கு பேருதவியாக இருக்கிறது.வரும், 2023ல், ஒவ்வொருவரும், 60 ஆயிரம் ரூபாய் மாதச் சம்பளமாக பெற வேண்டும் என்ற குறிக்கோளுடன் கல்விக்கான உதவிகளை, முதல்வர் வழங்குகிறார். 

நாட்டு மக்களின் முன்னேற்றத்திற்காக பாடுபடும் முதல்வரின் கரங்களை வலுப்படுத்த வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.உயர் கல்வித்துறை அமைச்சர் பழனியப்பன் பேசுகையில், ''தமிழக முதல்வர், மாணவர்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அறிவியல் கண்டுபிடிப்புகளை, மக்கள் பயன்பாட்டிற்கு வழங்கும் அவர் ஒரு சமூக விஞ்ஞானி,'' என்றார். இதில், எம்.பி., மகேந்திரன், எம்.எல்.ஏ.,க்கள் முத்து கருப்பண்ணசாமி, சண்முகவேலு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement