வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. எனவே பொதுமக்கள், குடிநீரை நன்கு காய்ச்சி குடிக்க வேண்டும்; உள்ளாட்சி நிர்வாகமும், குடிநீர் விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும்' என, சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது.
இதுபோன்ற நேரங்களில், குடிநீரில் கழிவுநீர் கலப்பதோடு, குடிநீர் மாசு படவும் வாய்ப்பு உள்ள. அதனால், பொதுமக்கள் விழிப்போடு இருக்க வேண்டும் என, சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.
பொது சுகாதாரத்துறை இயக்குனர் குழந்தைசாமி கூறியதாவது:
பொதுவாக, குடிநீரை நன்கு காய்ச்சி, ஆற வைத்து குடிப்பது நல்லது. அதுவும், மழைக் காலங்களில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். தரமற்ற குடிநீர், நோய் பாதிப்புகளுக்கு காரணம் என்பதால், பொது மக்கள் உஷாராக இருக்க வேண்டும்.
வீடுகளைச் சுற்றி தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ளுங்கள். பொதுமக்களுக்கு வழங்கப்படும் குடிநீரில், குளோரின் அளவை பரிசோதிக்கவும், மாதிரிகள் எடுத்து பாதிப்பு உள்ளதா என கண்டறியவும், உள்ளாட்சிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மழைநீர் தேங்கிய பகுதிகளில் சிறப்பு மருத்துவ முகாம் நடத்தவும், சுகாதாரத்துறை ஏற்பாடு செய்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை