Ad Code

Responsive Advertisement

முதல்வர் தீபாவளி வாழ்த்து

தீபாவளி பண்டிகையை ஒட்டி தமிழக மக்களுக்கு, முதல்வர் ஜெயலலிதா, வாழ்த்து தெரிவித்துள்ளார்.அவரது அறிக்கை: நாடு முழுவதும் மகிழ்ச்சி வெள்ளம் பொங்க, தீபாவளி பண்டிகையை உற்சாகத்துடன் கொண்டாடி மகிழும், தமிழக மக்கள் அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துகள். 

மக்களை பெருந்துன்பத்திற்கு ஆளாக்கிய, நரகாசுரன் என்ற அரக்கனை, திருமால் அழித்த தினமே, தீபாவளி பண்டிகையாக கொண்டாடப்படுகிறது. இந்நாள், இருள் விலகி, ஒளி பிறக்கும் தினமாகவும், தீமைகள் அழிந்து, நன்மை சுடர்விட்டு பிரகாசிக்கும் தினமாகவும், மக்களால் கருதப்படுகிறது. இந்த இனிய திருநாளில், நாடெங்கும் அன்பும், அமைதியும் தழைக்கட்டும். வேற்றுமை அகன்று, ஒற்றுமை ஓங்கட்டும். அனைவரது வாழ்விலும், வளமும், நலமும் பெருகட்டும்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement