மாணவர்களின் தன்மைக்கு ஏற்ப அவர்களுக்கு ஆசிரியர்கள் கற்பிக்க வேண்டும் என்றார் தஞ்சாவூர் முதன்மைக் கல்வி அலுவலர் இரா. திருவளர்செல்வி.
மாணவர்களுக்கு ஆசிரியர்கள் கல்வி கற்பிப்பதில் சிறந்த முறையில் பங்காற்ற வேண்டும்.
அரசுப் பள்ளியில் படித்த ஒவ்வொரு மாணவனும் உயர் கல்விக்குச் செல்லும்போது போதிய கல்வி அறிவோடு செல்ல வேண்டும். மேலும் மாணவர்களின் தன்மைக்கு ஏற்றவாறு சொல்லிக் கொடுக்க வேண்டும்.
வகுப்பில் உள்ள மாணவர்கள் 60 சதம் பேர் எளிதாகப் புரிந்து படித்து விடுகின்றனர். மேலும் 40 சதம் பேருக்கு நல்ல கல்வியை அளிக்க நாம் உழைக்க வேண்டும. மாணவர்கள் பல்வேறு தன்மைக் கொண்டவர்களாக இருப்பர். புரிந்து கொள்ளும் தன்மை குறைவாக இருக்கலாம். பயிற்சி பெறாதவர்களாக இருக்கலாம். இதையெல்லாம் புரிந்து கொண்டு நாம் அவர்களுக்கு ஏற்றவாறு கற்பிக்க வேண்டும். மாணவர்களை நன்றாகப் படிக்க வைக்க வேண்டிய பொறுப்பு ஆசிரியர்களிடமும், தலைமை ஆசிரியர்களிடமும்தான் உள்ளது.
அடிப்படை தமிழ், ஆங்கிலம், அறிவியல் ஆகியவற்றில் சிறந்த பயிற்சி அளிக்க வேண்டும். நன்றாக படித்து முன்னேற நாம் அளிக்கிற கல்விதான் அடிப்படை. அதை அனைத்து ஆசிரியர்களும் புரிந்து கொள்ள வேண்டும் என்றார் திருவளர்செல்வி.
மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர் ஜி. ரெங்கநாதன், உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் கோ. பரமசிவம், அனைவருக்கும் கல்வி இயக்க உதவி திட்ட அலுவலர் ஆ. ரமேஷ், கூடுதல் உதவி தொடக்கக்கல்வி அலுவலர் பொ. நடராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை