Ad Code

Responsive Advertisement

35 பள்ளி கட்டடங்கள் ராமநாதபுரத்தில் இடிப்பு

ராமநாதபுரம் மாவட்டத்தில் பழுதடைந்த 35 பள்ளி கட்டடங்களை இடிக்கப்பட்டன.பழுதடைந்த அரசு பள்ளி கட்டடங்களில் படிக்கும் மாணவர்களை வேறு இடங்களுக்கு மாற்ற வேண்டும்; அசம்பாவிதம் ஏற்படாமல் தடுக்க பழுதடைந்த கட்டடங்களை இடிக்க வேண்டுமென, கல்வித்துறை சமீபத்தில் உத்தரவிட்டது.

இதையடுத்து ராமநாதபுரத்தில் தொடக்கக் கல்வித்துறை, பள்ளிக் கல்வித்துறை சார்பில் கணக்கெடுக்கப்பட்டது. இதில் 80 க்கும் மேற்பட்ட பள்ளிகள் பழுதடைந்திருப்பது கண்டறியப்பட்டன. அங்கு படித்த மாணவர்கள் வேறு கட்டடங்களுக்கு மாற்றப்பட்டனர்.உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி கட்டடங்களை பொதுப்பணித்துறையும், தொடக்க, நடுநிலைப் பள்ளி கட்டடங்களை உள்ளாட்சி அமைப்புகளும் இடிக்க கலெக்டர் நந்தகுமார் உத்தரவிட்டார். அதன்படி மாவட்டத்தில் இதுவரை 35 கட்டடங்கள் இடிக்கப்பட்டுள்ளன.

முதன்மைக் கல்வி அதிகாரி ஜெயக்கண்ணு கூறுகையில், “பழுதடைந்த கட்டடங்களில் வகுப்பறை நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. பழுதடைந்த கட்டங்கள் கணக்கெடுக்கப்பட்டு சம்பந்தப்பட்ட துறைகள் மூலம் இடிக்கப்பட்டு வருகின்றன. விரைவில் அனைத்து பழுதடைந்த கட்டடங்களும் இடிக்கப்படும்,” என்றார்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement