Ad Code

Responsive Advertisement

பொதுத்துறை ஊழியர்களுக்கு 20 சதவீத போனஸ் அறிவிப்பு

தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு 20 சதவீத போனஸ் வழங்கப்படுவதாக தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: 

தொழிலாளர்களின் முன்னேற்றமே நாட்டின் பொருளாதா வளர்ச்சியை முழுமை அடைய செய்யும். உற்பத்தி மற்றும் பொருளாதார வளர்ச்சியில் தொழிலாளர் பங்கு முக்கியத்துவம் ஆகும். தொழிலார்களின் பணிகளுக்கு உரிய அங்கீகாரம் வழங்க வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு பொதுத்துறையில் பணிபுரியும் தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு போனஸ் , கருணைத்தொகை வழங்கிட உத்தரவிட்டுள்ளேன்.

இதன்படி மின்சார வாரியம், அரசு போக்குவரத்து கழகம் , நுகர் பொருள் வாணிப கழகம், அரசு ரப்பர் கழகம் , தமிழ்நாடு வன தோட்ட கழகம், தேயிலை தோட்ட கழகம் , கூட்டுறவு மற்றும் பொதுத்துறை சர்க்கரை ஆலைகள் , தமிழ்நாடு பால் கூட்டுறவு உற்பத்தியாளர்கள் இணையம், ஆகிய பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் தகுதியுள்ள ஊழியர்களுக்கு 8.33 போனசும், 11 .67 சதவீத கருணைத்தொகையும் சேர்த்து 20 சதவீத போனஸ் வழங்கப்படும்.


தமிழ்நாடு வாணிப கழக ஊழியர்கள், லாபம் ஈட்டும் கூட்டுறவு சங்கம், வீட்டு வசதி வாரியம் தமிழ்நாடு குடி நீர் வடிகால் வாரியம் சென்னை குடிநீர் , கழிவு நீரகற்றும் சி மற்றும் டி பிரிவு ஊழியர்கள் , உள்ளிட்ட 3 லட்சத்து 76 ஆயிரத்து 464 பேர் பயன் அடைவர். இதன்மூலம் அரசுக்கு 242 . 41 கோடி செலவாகும்.மின் வாரியத்தில் பணியாற்றும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு ரூ 2 ஆயிரமும், நுகர்பொருள் வாணிப கழகத்தில் பணியாற்றும் தற்காலிக ஊழியர்களுக்கு ரூ 1500 , மாவட்ட கூட்டுறவு மற்றும் தொடக்க கூட்டுறவு பணியாளர்களுக்கு ரூ . 1500 ம் போனசாக வழங்கப்படும்.இதில் 8.33% போனசாகவும், 11.67% கருணைத்தொகையாகவும் வழங்கப்படும் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement