Ad Code

Responsive Advertisement

அரசின் புதிய கல்விக்கொள்கை; பள்ளி கல்லூரிகளுக்கு உத்தரவு

மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை குறித்து மாணவ, மாணவியரின் கருத்துகளை கட்டாயம் பெற வேண்டும் என, பள்ளி கல்லூரிகளுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை, அனைத்து மாநிலங்களுக்கும் பொதுவான கல்விக் கொள்கையை அமல்படுத்தத் திட்டமிட்டு, பள்ளிக்கல்வி மற்றும் உயர்கல்வி தொடர்பான வரைவு கொள்கையை வெளியிட்டு உள்ளது. 

இதுதொடர்பாக, அனைத்து மாநிலங்களிலும் கருத்துக்கேட்பு கூட்டங்கள் நடத்தப்பட்டு, பொதுமக்கள் மற்றும் கல்வியாளர்களின் கருத்துகள் பெறப்பட்டு உள்ளன. பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர் தான், புதிய கல்விக்கொள்கையால் பயனடையப் போகின்றனர் என்பதால், அவர்களின் கருத்துகள் மிக முக்கியம் என, மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை தெரிவித்துள்ளது.

எனவே, மாணவ,மாணவியரிடம் கருத்துகளை பெற்று, ஆன்லைன் பதிவு செய்ய வேண்டும் எனப் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு உத்தரவிட்டு உள்ளது. மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ.,பள்ளிகளில், வரும் 5ம் தேதிக்குள், மாணவ, மாணவியரின் கருத்துகளை பெற உத்தரவிடப்பட்டு உள்ளது.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement