Ad Code

Responsive Advertisement

'நெட்' தேர்வு விடைத்தாள் நகல் நவ., 10 வரை விண்ணப்பிக்கலாம்

நெட் - நேஷனல் எலிஜிபிலிட்டி டெஸ்ட்' என்ற தேசிய திறனாய்வு தேர்வு விடைத்தாள் நகலை தேர்வர்களுக்கு வழங்க, மத்திய இடைநிலைக் கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., முடிவு செய்துள்ளது. 


கல்லுாரி உதவிப் பேராசிரியர் பணியில் சேரவும், இளநிலை ஆராய்ச்சி மாணவர்கள், மாதந்தோறும், 25 ஆயிரம் ரூபாய் உதவித் தொகை பெறவும், தேசிய அளவிலான, 'நெட்' தகுதித் தேர்வெழுதி தேர்ச்சி பெற வேண்டியது அவசியம்.

இத்தேர்வை, பல்கலை மானியக் குழுவான, யு.ஜி.சி., சார்பில், சி.பி.எஸ்.இ., நடத்துகிறது. ஜூன், 28ல் நாடு முழுவதும், 89 மையங்களில் நடந்த தேர்வில், தமிழகத்தைச் சேர்ந்த, 30 ஆயிரம் பேர் உட்பட, ஏழு லட்சத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இதன் முடிவுகள், கடந்த, 28ம் தேதி வெளியிடப்பட்டன.

வரும் டிசம்பர், 27ல் அடுத்த நெட் தேர்வு நடத்தப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தேர்வுக்கு, நவம்பர், 1ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.ஜூனில் முடிந்த தேர்வுக்கான விடை திருத்தங்களில் சந்தேகம் உள்ளதால், அதன் நகல் வேண்டும் என பலர், சி.பி.எஸ்.இ.,க்கு மனு அளித்தனர்.இதையடுத்து, 'நகல் தேவைப்படுவோர், 'செயலர், சி.பி.எஸ்.இ., புதுடில்லி' என்ற பெயருக்கு, 500 ரூபாய்க்கான, டி.டி., எடுத்து, நவம்பர், 10க்குள் அனுப்புமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement