Ad Code

Responsive Advertisement

ஜிமெயிலில் பிளாக் செய்யும் வசதி: கூகுளின் புதிய அப்டேட் அறிவிப்பு

கூகுளில் வரும் மெயில்களில் குறிப்பிட்ட சிலரின் மெயில்களைப் பார்க்க வேண்டாம் என எண்ணினால், அதனை உடனடியாக தடுத்து ‘பிளாக்’ செய்யும் வசதியை கூகுள் அறிமுகப்படுத்தியுள்ளது.

ஜிமெயிலை கணினி மூலமாக உபயோகிக்கும் வாடிக்கையாளருக்கு மட்டுமின்றி, ஆன்ட்ராய்டு போன்கள் மூலம் உபயோகப்படுத்துவோருக்கும், இந்த அப்டேட் வந்திருப்பதாக செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது கூகுள்.

ஒருமுறை ‘பிளாக்’ செய்யப்படும் நபர்களின் மெயில்கள் நேரடியாக ‘ஸ்பாம்’ என்னும், பெட்டிக்குள் சென்று சேரும். ஒருவேளை அந்த குறிப்பிட்ட நபரை பிளாக்கிலிருந்து எடுக்க நினைத்தாலும், உடனடியாக அவர்களை ‘அன்பிளாக்’ செய்துகொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அப்டேட்டின் மூலம், தேவையில்லாத, விளம்பரம் மற்றும் செய்தி வெளியிடும் பக்கங்களை நொடியில் பிளாக் செய்ய முடியும் என்கிறது கூகுள் வட்டாரம்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement