Ad Code

Responsive Advertisement

'அம்மா குழந்தை நல பரிசு பெட்டகம்' : திட்டத்தை துவக்கினார் முதல்வர் ஜெயலலிதா

அரசு மருத்துவமனையில் பிறக்கும், ஒவ்வொரு குழந்தைக்கும், 1,000 ரூபாய் மதிப்புள்ள, 'அம்மா குழந்தை நல பரிசு பெட்டகம்' வழங்கும் திட்டத்தை, முதல்வர் ஜெயலலிதா துவக்கி வைத்தார்.


ரூ.1,000 மதிப்பு:


'அரசு மருத்துவமனைகளில் பிறக்கும், ஒவ்வொரு குழந்தைக்கும், 1,000 ரூபாய் மதிப்புடைய, 'அம்மா குழந்தை நல பரிசு பெட்டகம்' வழங்கப்படும்' என, கடந்த ஆண்டு, சட்டசபையில், முதல்வர் ஜெ., அறிவித்தார்.அதன்படி, நடப்பாண்டு, அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு, 67 கோடி ரூபாயில், 'அம்மா குழந்தை நல பரிசு பெட்டகம்' வழங்கும் திட்டத்தை, தலைமைச் செயலகத்தில், முதல்வர் ஜெயலலிதா துவக்கி வைத்து, ஐந்து குழந்தைகளின் தாய்களுக்கு, பெட்டகத்தை வழங்கினார்.


சோப்பு, ஷாம்பு:


பெட்டகத்தில், குழந்தையை பாதுகாப்பாக பராமரிப்பதற்கு தேவையான, துண்டு; குழந்தைக்கான உடை; படுக்கை; கொசு வலை; நாப்கின்; 100 மி.மீ., அளவுடைய எண்ணெய் டப்பா; பிளாஸ்டிக் குப்பியில், 6 மி.லி., ஷாம்பு, சோப்புடன் கூடிய சோப்பு பெட்டி; நக வெட்டி, கிலுகிலுப்பை, பொம்மை; சுத்தமான கைகளுடன், குழந்தையை பராமரிக்க, பிளாஸ்டிக் டப்பாவில், 250 மி.லி., அளவு கை கழுவும் திரவம், பிரசவித்த தாய்க்கு, 100 கிராம் எடையுள்ள சோப்பு ஆகியவை இருக்கும்.

'சவுபாக்கியா' லேகியம் 
மேலும், பிரசவித்த தாயின் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், தாய்ப்பாலை அதிகரிக்கவும், 'சவுபாக்கியா' சுண்டிலேகியம், தாய் மற்றும் பச்சிளம் குழந்தையை பராமரிக்க தேவையான, பொருட்களை வைத்துக் கொள்ள பெட்டகம், என, 16 வகையான, பொருட்கள் இடம் பெற்றுள்ளன.


இந்நிகழ்ச்சியில், அமைச்சர்கள் பன்னீர்செல்வம், விஜயபாஸ்கர் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர். 

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement