Ad Code

Responsive Advertisement

குழந்தைகளுக்கான வீரதீர விருது விண்ணப்பங்கள் வரவேற்பு

குடியரசு தினத்தை ஒட்டி, மத்திய அரசு வழங்கும், குழந்தைகளுக்கான வீரதீர விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளன.குழந்தைகளின் வீரதீர செயல்களைப் பாராட்டி, மத்திய அரசின் இந்திய குழந்தைகள் நல கவுன்சில் சார்பில், 1958 முதல், விருது வழங்கப்படுகிறது.

ஒவ்வொரு ஆண்டும் தேசிய அளவில், 24 குழந்தைகளை தேர்வு செய்து, இந்த விருது வழங்கப்படுகிறது.வரும் ஜனவரியில் குடியரசு தினம் கொண்டாடு கிறது. எனவே, குழந்தைகளுக்கான வீரதீர விருது பெற, விண்ணப்பங்களை அனுப்பும்படி, மத்திய அரசு அறிவித்துள்ளது.

இதன்படி, 2014 ஜூலை, 1ம் தேதி துவங்கி, 2015 ஜூன், 30ம் தேதி முடிய, 14 வயதுக்குட்பட்ட குழந்தைகள் செய்த சாகச சம்பவங்களின் அடிப்படையில், விண்ணப்பங்கள் அளிக்க வேண்டும்.பள்ளி முதல்வர் அல்லது தலைமை ஆசிரியர், இந்திய குழந்தைகள் நல கவுன்சிலின் மாநில பொதுச் செயலர் அல்லது தலைவர், மாவட்ட கலெக்டர் மற்றும் மாவட்ட போலீஸ் எஸ்.பி., ஆகியோரில் யார் வேண்டு மென்றாலும், குழந்தைகளின் பெயர்களை பரிந்துரைசெய்யலாம். 

விண்ணப்பங்களை, வரும், 30ம் தேதிக்குள், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அலுவலகங்களில் ஒப்படைக்க வேண்டும் என, பள்ளிக்கல்வி இயக்குனர் அறிவித்துள்ளார். 

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement