Ad Code

Responsive Advertisement

இந்தியா முழுவதும் ஒரே அட்டையில் பேருந்து மற்றும் ரயிலில் பயணிக்கலாம்: விரைவில் அறிமுகம்

இந்தியாவின் எந்த ஒரு ஊரிலும் உள்ள மெட்ரோ ரயில்கள், வழக்கமான ரயில்கள், பேருந்துகளில் பயணிப்பதற்காக பொதுவான ஒரு பயண அட்டையை அறிமுகப்படுத்த மத்திய நகர்ப்புற வளர்ச்சி அமைச்சகம் திட்டமிட்டுள்ளது.

பயணத்திற்கு மட்டுமல்லாமல் கடைகளில் பொருட்கள் வாங்குவதற்கும் இந்த அட்டை பயன்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்மார்ட் மொபிலிடி கார்டு எனப்படும் இவ்வகை அட்டைகளை குறித்த காலத்திற்குள் அறிமுகப்படுத்தவும் இதற்காக மாநிலங்களுக்கு இடையில் ஒருங்கிணைப்பை ஏற்படுத்தவும் நகர்ப்புற வளர்ச்சி அமைச்சகம் முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. வெளிநாடுகளில் இது போன்று செயல்படுத்தப்பட்டு வரும் ஸ்மார்ட் கார்டு திட்டங்கள்குறித்து ஆய்வு செய்யப்பட்டுள்ளதாக நகர்ப்புற வளர்ச்சி அமைச்சக அதிகாரிகள் தெரிவித்தனர். மத்திய நகர்ப்புற வளர்ச்சி அமைச்சகத்தின் கூடுதல் செயலாளர் தலைமையில் ஒரு கமிட்டி இது தொடர்பான பணிகளை கவனித்து வருகிறது.​

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement