Ad Code

Responsive Advertisement

7243 நபர்கள் செவிலியராக தேர்வு: 5 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கினார்முதல்வர் ஜெயலலிதா

மருத்துவப் பணியாளர்கள் தேர்வு வாரியத்தால் தெரிவு செய்யப்பட்ட 7243 நபர்களுக்கு செவிலியர் பணியிடங்களுக்கான பணி நியமன ஆணைகளை வழங்கும் அடையாளமாக 5 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை முதல்வர் ஜெயலலிதார் வழங்கினார்.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அரசு செய்திக் குறிப்பில், "மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவம் சாராப் பணியாளர்களை உடனுக்குடன் தேர்வு செய்து நியமனம் செய்யும் பொருட்டு, இந்தியாவிலேயே முதன்முறையாக மருத்துவப் பணியாளர்கள் தேர்வு வாரியம் 2.1.2012 அன்று அமைக்கப்பட்டு, மருத்துவப் பணியாளர்களின் காலிப்பணியிடங்கள் மற்றும்புதிதாக உருவாக்கப்பட்ட மருத்துவப் பணியிடங்கள் ஆகியவற்றை நிரப்புவதற்கான தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன.

இதுவரை 5578 மருத்துவர்கள் மற்றும் 1374 மருத்துவம் சாராப் பணியாளர்கள், இத்தேர்வு வாரியத்தால் தேர்வு செய்யப்பட்டு பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.மருத்துவத் துறையில் செவிலியர்களின் பணி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும். வளர்ந்து வரும் மருத்துவப் பிரிவுகளில் தேவைக்கேற்ப தொற்றா நோய்களுக்கான சிகிச்சை, ஒருங்கிணைந்த அவசர கால மகப்பேறு மற்றும் பச்சிளம் குழந்தை மையங்கள், பச்சிளம் குழந்தைகள் தீவிர சிகிச்சை பிரிவுகள், 24/7 மணிநேர பிரசவ சேவை, மகப்பேறு மற்றும் குழந்தை நலப்பிரிவு, நோயுற்ற பச்சிளம் குழந்தைகள் பராமரிப்பு மையங்கள், மத்திய அரசின் ராஷ்டிரிய பால் ஸ்வஸ்திய கார்யக்கிரம் போன்ற பல திட்டங்களில் காலியாக உள்ள7243 செவிலியர் பணியிடங்களை மருத்துவப் பணியாளர்கள் தேர்வு வாரியத்தின் மூலம் தெரிவு செய்திட தமிழ்நாடு அரசால் ஆணையிடப்பட்டது.

அந்த ஆணைக்கிணங்க, காலியாகவுள்ள செவிலியர் பணியிடங்களை நிரப்புவதற்கு மருத்துவப் பணியாளர்கள் தேர்வு வாரியம் நடவடிக்கை எடுத்து விண்ணப்பித்த 40,465 நபர்களுக்கு தேர்வுகள் நடத்தப்பட்டு 7243 நபர்கள் தெரிவு செய்யப்பட்டனர்.மருத்துவப் பணியாளர்கள் தேர்வு வாரியத்தால் தெரிவு செய்யப்பட்ட 7243 நபர்களுக்கு செவிலியர் பணியிடங்களுக்கான பணி நியமன ஆணைகளை வழங்கும் அடையாளமாக 5 நபர்களுக்கு முதல்வர் கடந்த 7.9.2015 அன்று பணி நியமன ஆணைகளை வழங்கினார்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement