பெருக்கல் வாய்பாட்டை மகிழ்ச்சியுடன் கற்க A Maths Games of Multiplication, Multiplication 101என்கிற Softwares துணைபுரிகிறது.
1. A Maths Games of Multiplication இதில் 1 முதல் 10 வாய்பாடுகள் வரை கொடுக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் எளிமையாக கற்கவும், கற்றதை மனதில் பதியவைக்கவும் முடிகிறது.
மேலும் கற்கும் மனநிலை மாணவர்கள் மனதில் ஏற்படுகிறது. தவறாக செய்தால், எவ்வாறு செய்ய வேண்டும் என்ற விளக்கமும் தருகிறது. ஒவ்வொரு வாய்பாட்டின் முடிவிலும்Your Answer Correctly : _ Questions out of _ . என Result காட்டப்படுகிறது. மதிப்பெண் குறைவாக பெற்றால் Repeat Problem Questions எனவும், முழுமையாக செய்ய Play Again எனவும், அனைத்தும் சரியாக செய்தால் More Quizzes எனவும்வருகிறது. More Quizzes என்பதை கிளிக் செய்தால் முதன்மை பக்கத்தைக் காட்டும். அதில் எந்த வாய்பாடு வேண்டுமோ அதை கிளிக் செய்து அடுத்த வாய்பாட்டிற்கு செல்லலாம். இதை முடித்த பிறகு எந்த வாய்பாட்டில் எப்படி மாற்றி கேட்டாலும் விடையளிக்கும் திறனை மாணவர்கள் பெறுகின்றனர் என்பது கூடுதல் சிறப்பு.
2. இதே போல்Multiplication 101 என்கிற Software பெருக்கலை எளிமையாக செய்ய துணைபுரிகிறது. இதில் எந்த வாய்பாடு வேண்டுமோ அதை எடுத்துக்கொண்டால் அதில் மாற்றி மாற்றி கேட்கும் கேள்விகளுக்கு சரியான விடையை தேர்ந்தெடுக்க வேண்டும். 10 வினாக்களுக்கும் சரியாக பதில் அளித்தால் பெரிய கைத்தட்டல் கிடைக்கும்.
இதுவும் மாணவர்களின் பெருக்கல் திறனை வளர்க்க பெரிதும் உதவுகிறது.
இவற்றை நீங்களும் உங்கள் பள்ளியில் பயன்படுத்தி பார்த்து எப்படி உள்ளது என தங்களின் மேலான கருத்துக்களை பகிருங்கள் ஆசிரிய நண்பர்களே!
http://download.cnet.com/Math-Gam…/3000-2053_4-10686239.html
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை