Ad Code

Responsive Advertisement

10ம் வகுப்பு பொதுத்தேர்வுக்குஆதார் எண் கட்டாயமில்லை!

 'பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு, ஆதார் எண் கட்டாயம் இல்லை' என, மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., தெரிவித்துள்ளது.

பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்களின், சுய விவரங்களை பள்ளிகள் சேகரித்து, தேர்வுத்துறைக்கு அனுப்புகின்றன. தமிழகத்தில், சமச்சீர் கல்வியை பின்பற்றும், அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவ, மாணவியரிடம் ஆதார் எண் பெறப்படுகிறது.இதேபோல், சி.பி.எஸ்.இ., பள்ளிகளிலும், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் விவரங்களை சேகரித்து அனுப்ப, சி.பி.எஸ்.இ., தேர்வுப்பிரிவு உத்தரவிட்டுள்ளது. பல மாணவர்களுக்கு ஆதார் எண் இல்லாத நிலையில், ஆதார் எண் கேட்டு கட்டாயப்படுத்துவதாக புகார் எழுந்தது.

இதையடுத்து, 'ஆதார் எண் கட்டாயமில்லை' என, சி.பி.எஸ்.இ., விளக்கம் அளித்துள்ளது. இதுதொடர்பாக, பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில், 'ஆதார் எண்ணை பெற்றோர் தெரிவிப்பது, அவரவர் விருப்பத்தை பொறுத்தது. அவர்களை பள்ளிகள் கட்டாயப்படுத்த கூடாது' என, தெரிவித்து உள்ளது

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement