Ad Code

Responsive Advertisement

செய்முறை வழிகாட்டி வராததால் 10 ம் வகுப்பு ஆசிரியர்கள் தவிப்பு

பள்ளிகள் திறந்து 3 மாதங்களுக்கு மேலாகியும் 10 ம் வகுப்பு வழிகாட்டிவராததால், ஆசிரியர்கள் அறிவியல் பாட செய்முறை பயிற்சி அளிக்க முடியாமல் தவிக்கின்றனர்.பத்தாம் வகுப்பு மாணவர்கள் அறிவியல் பாடத்தில் 75 மதிப்பெண்களுக்கு எழுத்துத்தேர்வும், 25 மதிப்பெண்களுக்கு செய்முறை தேர்வும் எழுத வேண்டும்.

சென்ற ஆண்டு 26 செய்முறை வினாக்கள் கொடுக்கப்பட்டன. இதில் மாதிரி செய்முறைகள் 10 ம், தேர்வுக்கான செய்முறைகள் 16 ம் தனித்தனியாக பிரித்து தரப்பட்டன. இதற்கான வழிகாட்டியும் ஜூன் மாதமே வழங்கப்பட்டது. இதனால் மாணவர்களுக்கு ஆசிரியர்கள் முறையாக செய்முறை பயிற்சி வழங்கினர். இந்த ஆண்டு 24 செய்முறைகள் 2 தொகுதிகளாக பிரித்து தரப்பட்டுள்ளன. இதில் மாதிரி செய்முறைகள், தேர்வுக்கான செய்முறைகள் என, தனித்தனியாக பிரித்து கொடுக்கப்படவில்லை. பள்ளிகள் திறந்து 3 மாதங்களுக்கு மேலாகியும் செய்முறைதேர்வு வழிகாட்டியும் வழங்கப்படவில்லை. இதனால் எவை, மாதிரி செய்முறைகள், தேர்வுக்கான செய்முறைகள் என, தெரியாமல் ஆசிரியர்கள் குழப்பத்தில் உள்ளனர்.


தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு மாநில பொதுச்செயலாளர் பேட்ரிக்ரெய்மண்ட் கூறியதாவது: சென்ற ஆண்டை போல் செய்முறை வினாக்கள் கொடுத்திருந்தால் பழைய வழிகாட்டி மூலம் நடத்திவிடலாம். ஆனால் இந்த ஆண்டு 2 வினாக்கள் குறைந்துள்ளன. இதனால் எந்த 16 செய்முறைகளை தேர்வுக்கு நடத்துவது என தெரியவில்லை. செப்., 14 ல் காலாண்டு தேர்வு துவங்க உள்ளநிலையில் மாணவர்கள் "பிராக்டிக்கல் நோட்' எழுத முடியாமல் உள்ளனர், என்றார் 

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement