Ad Code

Responsive Advertisement

பட்டதாரி ஆசிரியர்கள் பணி நிரவல்: மே மாதத்துக்கு தள்ளிவைக்க கோரிக்கை

பட்டதாரி ஆசிரியர்கள் பணி நிரவலை மே மாதத்துக்கு தள்ளிவைக்குமாறு ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்தனர்.தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் சார்பில் பள்ளிக் கல்வி அமைச்சர் கே.சி. வீரமணியிடம் கோரிக்கை மனு திங்கள்கிழமை வழங்கப்பட்டது. அந்த மனு விவரம்:-


அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரிந்து வரும் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் ஆகஸ்ட் 26 முதல் 29 வரை பணி நிரவல் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அரசுப் பள்ளிகளில் 10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி விகிதம் சிறப்பாக இருந்தது. இதன் காரணமாக 37 ஆயிரம் மாணவர்கள் கூடுதலாகச் சேர்ந்துள்ளனர். உபரி ஆசிரியர்களைக் கணக்கெடுத்ததில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகம், பள்ளிக் கல்வி இயக்குநர் அலுவலகம் இடையே முரண்பாடுகள் உள்ளன.


இந்தக் கல்வியாண்டில் 3 மாதங்கள் கடந்துவிட்ட நிலையில், இப்போது இடமாற்றம் செய்தால் அவர்களது குடும்பத்தினர் சிரமப்படுவர். எனவே, உபரி ஆசிரியர்களை இடமாற்றம் செய்தே ஆக வேண்டும் என்றால், வரும் மே அல்லது ஜூன் மாதத் தொடக்கத்தில் இடமாற்றம் செய்ய வேண்டும் என அந்த மனுவில் கோரப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement