Ad Code

Responsive Advertisement

சிறுபான்மை கல்வி உதவித்தொகை: வருமான சான்று மற்றும் கடந்த ஆண்டு மதிப்பெண் பட்டியலை பெற அலைய வேண்டாம் பெற்றோரே கையெழுத்திட்டு தரலாம்

'சிறுபான்மை மாணவர் கல்வி உதவித்தொகை பெற, வருமானச் சான்றிதழில் பெற்றோரே கையெழுத்திட்டு அளித்தால் போதும்' என, பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். தமிழக அரசு, அரசு உதவிபெறும் மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில், 1ம் வகுப்பு முதல், பிளஸ் 2, உயர் கல்வியில் ஆராய்ச்சி படிப்பு வரையிலும், தொழில் படிப்பு, தொழில்நுட்பப் படிப்பு படிக்க, சிறுபான்மையின மாணவருக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.

கிறிஸ்தவ, இஸ்லாமிய, புத்த, சீக்கிய, பார்சி மற்றும் ஜெயின் வகுப்பினருக்கு, இந்த உதவித்தொகை கிடைக்கும்.உதவித்தொகை பெற, மாணவரின் பெற்றோருக்கு குறிப்பிட்ட வருமான வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதற்கான சான்றிதழை, வருவாய் துறை அதிகாரிகளிடம் பெற்று, பள்ளிகளில் வழங்க வேண்டும். ஆனால், இந்த ஆண்டு, பெற்றோர் அல்லது பாதுகாவலர், தாங்களே சுய கையொப்பமிட்டு வருமானச் சான்றிதழை அளித்தாலே போதும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. எனவே, வருமான வரிச் சான்றிதழை, வருவாய் துறையில் வாங்க வேண்டிய அவசியம் இல்லை என, தமிழ்நாடு சிறுபான்மையினர் நலத்துறை அறிவித்துள்ளதாக, பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், மாணவர் தங்களின் கடந்த ஆண்டு மதிப்பெண் பட்டியலை, சுய கையெழுத்திட்டு சமர்ப்பித்தாலே போதும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement