Ad Code

Responsive Advertisement

யு.ஜி.சி.,க்கு மூடுவிழா? மத்திய அரசு முடிவு

 பல்கலைக் கழக மானியக் குழு எனப்படும், யு.ஜி.சி.,யை கலைத்து விட்டு, தேசிய உயர்கல்வி ஆணையம் என்ற புதிய அமைப்பை ஏற்படுத்தி, நாட்டின் கல்லுாரிகள் மற்றும் உயர்கல்வி மையங்களை கட்டுப்படுத்த, மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

இது தொடர்பாக, கல்வி விவகாரங்களை கவனிக்கும், மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறையும், திட்டக் கமிஷனுக்கு மாற்றாக ஏற்படுத்தப்பட்டுள்ள, 'நிடி ஆயோக்' அமைப்பும், தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளன.ஊழல், முறைகேடு, வெளிப்படையான செயல்பாடு இன்மை போன்றவற்றால், யு.ஜி.சி.,யின் செயல்பாடுகள் சந்தேகத்திற்கு இடமாகி உள்ளன. அதை சீரமைக்க என்ன செய்யலாம் என்பது குறித்து, ஆராய்ந்து அறிக்கை அளிக்குமாறு, யு.ஜி.சி.,யின் முன்னாள் உறுப்பினர்களில் ஒருவரான, ஹரி கவுதம் தலைமையில் கமிட்டி ஒன்று அமைக்கப்பட்டது.

அந்த கமிட்டி, மார்ச் மாதம், மத்திய அரசிடம் அளித்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுஉள்ளதாவது:

* யு.ஜி.சி., அமைப்பையே கலைத்து விட்டு, தேசிய உயர்கல்வி ஆணையம் என்ற புதிய அமைப்பை ஏற்படுத்த வேண்டும்.

* பிஎச்.டி.,யில் சேருவதற்கு, தேசிய அளவிலான திறனறி தேர்வு நடத்தப்பட வேண்டும்.

* துணை வேந்தர்கள், ஒரு பதவி காலம் மட்டுமேநியமிக்கப்பட வேண்டும்.

இந்த பரிந்துரைகளை அமல்படுத்த, மத்திய அரசு தீவிரமாக ஆலோசனை நடத்தி வருவதாக, பார்லிமென்டில், சில நாட்களுக்கு முன், எம்.பி., ஒருவரின் கேள்விக்கு, மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி பதிலளித்தார்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement