Ad Code

Responsive Advertisement

அரசு இசைப் பள்ளியில் மாணவர் சேர்க்கைக்கான கால அவகாசம் நீட்டிப்பு

தூத்துக்குடி மாவட்ட அரசு இசைப் பள்ளியில் 2015-16 ஆம் கல்வியாண்டில் மாணவர், மாணவிகளை சேர்க்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஆட்சியர் ம. ரவிகுமார் வெளியிட்ட செய்திக்குறிப்பு:தூத்துக்குடி மாவட்ட அரசு இசைப்பள்ளியில் மாணவர், மாணவிகள் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இதில், மாணவர், மாணவிகளை சேர்த்திட அக்டோபர் 31 ஆம் தேதி வரை கால நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு தலைமை ஆசிரியை, மாவட்ட அரசு இசைப்பள்ளி, கணேஷ் நகர் மேற்கு, 4 ஆவது தெரு தூத்துக்குடி-8 என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம். மேலும், 0461-2300605 என்ற தொலைபேசி எண்ணிலும், 94438 10926 என்ற செல்லிடப்பேசி மூலமாகவும் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement