Ad Code

Responsive Advertisement

மாணவனுக்கு பள்ளியில் தண்டனை அறிக்கை அளிக்க உத்தரவு

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் டி.பாப்பாங்குளம் தண்டபாணி மகன் வினோத் ஸ்ரீராம். திருப்புவனத்திலுள்ள தனியார் பள்ளியில் 10ம் வகுப்பு படித்தார். வட்டார தடகள போட்டியில் பங்கேற்க, இவருக்கு பள்ளி உடற்கல்வி ஆசிரியர் தமிழ்செல்வன் பயிற்சி அளித்தார்.

பயிற்சியை சரியாக கவனிக்காததால் அதிக எடை உள்ள மாணவர் ஒருவரை முதுகில் துாக்கிக் கொண்டு ஓட வினோத்திற்கு உடற்கல்வி ஆசிரியர் உத்தரவிட்டார். இந்த தண்டனையால் வினோத் ஸ்ரீராமிற்கு கழுத்து பகுதி பாதித்து தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மாணவனின் பெற் றோர் கலெக்டர் மலர்விழியிடம் புகார் கொடுத்தனர். கலெக்டர் உத்தரவின் பேரில், சிவகங்கை மாவட்ட மெட்ரிக் பள்ளிகள் ஆய்வாளர் கோவிந்தராஜன் சம்பந்தப்பட்ட பள்ளி முதல்வரிடம் நேற்று விசாரித்தார்.
இதுகுறித்த அறிக்கையை மெட்ரிக் பள்ளிகளின் இயக்குனர் பிச்சைக்கு அனுப்பி வைக்கப்படும் என, ஆய்வாளர் தெரிவித்தார்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement