Ad Code

Responsive Advertisement

ஆசிரிய பயிற்றுனர்களுக்கு மனமொத்த மாறுதல்

வட்டார வளமையங்களில் காலிப்பணியிடங்கள் இல்லாததால் ஆசிரிய பயிற்றுனர்களுக்கு மனமொத்த மாறுதல் மட்டும் நடத்த அனைவருக்கும் கல்வி இயக்கம் முடிவு செய்துள்ளது.அனைவருக்கும் கல்வி இயக்கத்தில் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்க குறுமையத்திற்கு (3 முதல் 7 பள்ளிகள் வரை) ஒருவர் வீதம் ஆசிரிய பயிற்றுனர்கள் நியமிக்கப்பட்டனர். 

சென்ற ஆண்டு 10 பள்ளிகளுக்கு ஒருவர் என மாற்றப்பட்டு, உபரி பயிற்றுனர்கள் பணிநிரவல் மூலம் காலியிடங்களில் நியமிக்கப்பட்டனர். நடப்பாண்டில் காலியிடங்கள் இல்லாததால் இடமாறுதல் கவுன்சிலிங் நடத்த முடியவில்லை. இதையடுத்து மனமொத்த மாறுதலை (மியூச்சுவல்) மட்டும் நடத்த அனைவருக்கும் கல்வி இயக்கம் முடிவு செய்துள்ளது.
ஏற்கனவே 3 ஆண்டுகள் பணிபுரிந்த ஒன்றியத்திற்கு மீண்டும் மாறுதல் கோர கூடாது. மனமொத்த மாறுதல் கோரும் இருவரும் ஒரே பாடப்பிரிவை சேர்ந்தவராக இருக்க வேண்டும். ஜனவரியில் நிர்வாக மாறுதல்
பெற்றவர்களும் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்களை மாநில
திட்ட அலுவலகத்திற்கு ஆக.,11 க்குள் அனுப்ப வேண்டும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement