10/08/2015 அன்று தொடக்கக்கல்வி இயக்குனர் திரு.இளங்கோவன் அவர்களையும் பள்ளிக்கல்வி இயக்குனர் திரு.கண்ணப்பன் அவர்கையும் "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை " மாநில நிர்வாகிகள், பொதுச் செயலாளர் திரு.ஜார்ஜ் அவர்களின் தலைமையில் மரியாதை நிமித்தமாக சந்தித்தனர்.
அச்சமயம் 02/08/2015 அன்று விருதுநகரில் நடைபெற்ற "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை " - இன் மாநில தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து நிர்வாகிகளையும் மாநிலத் தலைவர் திரு.பாலமூருகபாண்டியன் அவர்கள் அறிமுகம் செய்து வைத்தார். அனைவருக்கும் இயக்குனர்கள் தங்களின் பாராட்டுக்களை தெரிவித்தனர்.
பொதுச் செயலாளர் திரு.ஜார்ஜ் அவர்கள் மாநில நிர்வாகிகள் அனைவரும் அரசுக்கும் புரட்சித்தலைவி, மாண்புமிகு தமிழக முதல்வர் "அம்மா" அவர்களுக்கும், அரசுக்கும் பேரவைக்கும் விசுவாசமாக இருக்கவேண்டும் எனவும், தங்களுக்கு வழங்கப்பட்ட பதவிகளை, பொறுப்புடன் பிற ஆசிரியர்களுக்காக பணியாற்ற வேண்டும் எனவும் கூறினார்.
மாநில பொருளாளர் திரு.இலட்சுமணன் அவர்கள் அனைவருக்கும் பேரவையின் சார்பாக நன்றிகளை தெரிவித்தார் .
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை