Ad Code

Responsive Advertisement

அம்மா முகாமில் புதிய நடைமுறை அதிகாரிகளுக்கு அரசு உத்தரவு

கிராமங்களில் நடக்கும் அம்மா திட்ட முகாமில் புதிய நடைமுறையை அரசு கொண்டுவந்துள்ளது.இதை பின்பற்றவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.தாலுகா அளவில் உள்ள அனைத்துக் கிராமங்களில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் அரசின் அம்மா திட்ட முகாம் நடைபெறும். பொதுமக்களிள் புகார் முதல் பட்டா மாறுதல், ரேஷன் கார்டு போன்ற மனுக்கள் பெறப்படும். மனுக்கள் குறித்து பதிவேடு பராமரிக்கபட்டு தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும்.

இம்முகாமில் இதுவரை வருவாய் துறை அதிகாரிகள் மட்டும் ஒருங்கிணைந்து அனைத்து வித நடவடிக்கைகளையும் எடுத்து வந்தனர். தற்போது இதில் அனைத்து துறை பங்களிப்பும் இருக்க அரசு உத்தரவிட்டுள்ளது.

அதில்,' வருவாய் துறை அல்லாது மற்ற துறை அரசு அதிகாரிகளும் அம்மா திட்ட முகாமில் பங்கேற்று பொதுமக்களின் குறைகளை நிவர்த்தி செய்ய வேண்டும்' என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

எடுத்துகாட்டாக, வட்டார வளர்ச்சி அலுவலரால் குடிநீர் , கழிவு நீர் கால்வாய் , சத்துணவு மையங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துதல், மாவட்ட கல்வி அலுவலரால் கிராமத்தில் உள்ள மாணவர்களிடம் உயர் மற்றும் மேல்நிலை கல்வி குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துதல், சுகாதாரத்துறை, வேளாண் துறை, சமூக நலத்துறை, கால்நடை பராமரிப்புத்துறை, காவல் துறை, தீயணைப்பு மற்றும் மீட்புத்துறை போன்ற அரசு துறை அதிகாரிகள் அந்த துறை சார்ந்த பணிகளை கிராமத்தில் செய்ய கூறப்பட்டுள்ளது. இதை அந்தந்த பகுதி தாசில்தார் தலைமை வகித்து அதிகாரிகளை வழி நடத்துவார்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement