Ad Code

Responsive Advertisement

கலை ஆசிரியர் தேர்வு ரத்து : விரைவில் போட்டித் தேர்வு டி.ஆர்.பி., முடிவு

அரசு பள்ளிகளில், 762 கலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப, இரண்டு ஆண்டுகளுக்கு முன் வெளியிட்ட அறிவிப்பை, தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி., திடீரென ரத்து செய்துள்ளது; 'விரைவில் போட்டித் தேர்வு அறிவிக்கப்படும்' என்றும் அறிவித்துள்ளது. 

அரசு பள்ளிகளில், ஓவியம், தையல், இசை மற்றும் உடற்கல்விப் பாடப்பிரிவுகளில் காலியாக இருந்த, 762 கலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப, 2013ல், டி.ஆர்.பி., அறிவிப்பு வெளியிட்டது. மாநில அளவில், வேலைவாய்ப்பு பதிவு மூப்பு அடிப்படையில், 1:5 என்ற விகிதத்தில், தேர்வர்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டு, சான்றிதழ் சரிபார்ப்பும் நடந்தது. ஆனால், இந்த நடவடிக்கையை எதிர்த்து, பட்டதாரிகள், நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த, சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை, 'போட்டித் தேர்வு மூலம் ஆசிரியர்களை நியமிக்க வேண்டும்' என, உத்தரவிட்டது.

ஜனவரியில், கலை ஆசிரியர்களுக்கான போட்டித் தேர்வு பாடத்திட்டத்துக்கு, அரசு ஒப்புதல் அளித்தது. ஆனால், இந்தப் பாடத்திட்டம் வெளியிடப்படவில்லை.இந்நிலையில், இரண்டு ஆண்டுகளாக இழுபறியில் இருந்த, இந்த தேர்வுக்கான அறிவிப்பை திடீரென ரத்து செய்து, டி.ஆர்.பி., உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவை, டி.ஆர்.பி., உறுப்பினர் செயலர் வசுந்தரா தேவி பிறப்பித்துள்ளார். மேலும், போட்டித் தேர்வு அறிவிப்பு புதிதாக வெளியிடப்படும் என்றும் தெரிவித்து உள்ளார்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement